Coconut Oil: ரேஷன் கடைகள் மூலம் தமிழகம் முழுவதும் தேங்காயெண்ணெய் விநியோகம்!

MP Eshwarasami assurance: தமிழகத்தின் 14 மாவட்டங்களில் ரேஷன் கடைகள் மூலம் தேங்காய் எண்ணெய் விநியோகிக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என எம்.பி. ஈஸ்வரசாமி உறுதி அளித்தார்... 

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jun 13, 2024, 02:30 PM IST
  • தமிழகம் முழுவதும் தேங்கெண்ணெய் விநியோகம்
  • எம்.பி ஈஸ்வரசாமி வாக்குறுதி
  • ரேஷன் கடைகளின் மூலம் விநியோகம்
Coconut Oil: ரேஷன் கடைகள் மூலம் தமிழகம் முழுவதும் தேங்காயெண்ணெய் விநியோகம்! title=

பொள்ளாச்சி: தமிழ்நாட்டில் முதற்கட்டமாக 14 மாவட்டங்களில் உள்ள ரேஷன் கடைகள் மூலம் தேங்காய் எண்ணெய் விநியோகிக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என பொள்ளாச்சி எம்.பி. ஈஸ்வரசாமி உறுதி அளித்துள்ளார். பொள்ளாச்சி மகாலிங்கபுரத்தில் உள்ள சமத்தூர் ராம அய்யங்கார் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசின் இலவச சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

பொள்ளாச்சி நகராட்சி தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமை ஆசிரியர் கோபாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். இதில் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரசாமி கலந்து கொண்டு 41 மாணவர்களுக்கு இலவச சைக்கிள்களை வழங்கினார்.

தொடர்ந்து அவர் பேசுகையில், அரசு பள்ளிகளின் தரம், மாணவர்களின் கல்வித்தரம் உயர  வேண்டும் என்பதற்காக தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அரசு பள்ளி மாணவர்கள் கல்வித்தரத்தில் உயர்ந்து சாதனை படைக்க வேண்டும் என்பதற்காகவே இலவச திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்திக் கொண்டிருக்கிறது.

முன்னாள் முதல்வர் கருணாநிதி அரசு பள்ளிகளுக்கு எண்ணற்ற திட்டங்களை அறிவித்து செயல்படுத்தினார். அவரது வழித்தோன்றலாக நமது முதல்வர் ஸ்டாலின் வெளிநாடுகளும் பார்த்து வியக்கும் வண்ணத்தில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். இதில் சமீபத்தில் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வரும் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் தான். இதனை ஆறு முதல் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கும் செயல்படுத்த அரசு ஆலோசித்து வருகிறது.

மேலும் படிக்க | Prabhas : நடிகர் பிரபாஸிற்கு திருமணம்!? மணப்பெண் இவரா? வைரலாகும் இன்ஸ்டா பதிவு!

அதேபோல் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி சட்டமன்றம் தோறும் விளையாட்டு மைதானங்கள் அமைக்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறார். இதன்மூலம் மாணவர்கள் கல்வி மட்டும் இன்றி விளையாட்டிலும் சிறந்து விளங்க வாய்ப்பாக இருக்கும்.
பொள்ளாச்சி பகுதியில் அரசு தேர்வுகளுக்கு தயாராகும் வகையில் இலவச பயிற்சி மையம் அமைக்கவும் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.

சென்னையில் இருந்து கோவை வரை இயக்கப்படும் சேரன் எக்ஸ்பிரஸ் ரயிலை  பொள்ளாச்சி வரை நீடிக்க ஒன்றிய அரசிடம் வலியுறுத்தப்படும். தென்னை விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, நாடாளுமன்ற தேர்தலின் போது அளித்த வாக்குறுதியின் படி, உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணியின் வழிகாட்டுதலின்படி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஒப்புதல் பெற்று தமிழ்நாட்டில் முதல் கட்டமாக 14 மாவட்டங்களில் உள்ள ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விநியோகிக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் தி.மு.க. நகர செயலாளர் நவநீதகிருஷ்ணன், துணைச் செயலாளர் தருமராஜ்,  தலைமைப் பொதுக்குழு உறுப்பினர்கள் மு.க. முத்து, ஜெயக்குமார், ஆச்சிப்பட்டி பாலு,   நகராட்சித் துணைத் தலைவர் கௌதம், நகராட்சி கவுன்சிலர்கள் உமாமகேஸ்வரி, செந்தில்குமார், பெருமாள், துரைபாய் என்கிற சையது யூசுப்,   டேஸ்டி பாலு, துரை என்கிற கிருஷ்ணகுமார், பாலகிருஷ்ண வேணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க | என்னடா பண்ணி வச்சிருக்கீங்க? ரசிகர்களை மிரள வைத்த சரிகமப ப்ரோமோ வீடியோ!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News