என்னடா பண்ணி வச்சிருக்கீங்க? ரசிகர்களை மிரள வைத்த சரிகமப ப்ரோமோ வீடியோ!

Saregamapa Zee Tamil Promo : சரிகமப நிகழ்ச்சியில் இயக்குநர் மணிரத்தினத்தின் மௌனராகங்கள் சுற்று ஒளிபரப்பாக இருக்கும் நிலையில் வித்தியாசமான ப்ரமோ வைரலாகிறது...

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jun 13, 2024, 02:09 PM IST
  • சரிகமப நிகழ்ச்சியில் இயக்குநர் மணிரத்தினத்தின் மௌனராகங்கள் சுற்று
  • சரிகமப நிகழ்ச்சியில் வித்தியாசமான ப்ரமோ
  • நடிப்பில் கலக்கும் பாடகர்கள்
என்னடா பண்ணி வச்சிருக்கீங்க?  ரசிகர்களை மிரள வைத்த சரிகமப ப்ரோமோ வீடியோ! title=

தமிழ் சின்னத்திரையில் பிரபலமான தொலைக்காட்சி சேனல்களில் ஒன்றாக இருந்து வருகிறது ஜீ தமிழ். இந்த சேனலில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளுக்கும் சீரியல்களுக்கும் மக்கள் மத்தியில் தனி வரவேற்பு உண்டு. ரியாலிட்டி ஷோக்களில் தற்போது ஒளிபரப்பாகி வரும் சரிகமப ஷோ மக்கள் மத்தியில் தொடர்ந்து கவனத்தை ஈர்த்து வருகிறது. 

ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு விதமான ரவுண்ட் நடத்தப்பட்டு வருகிறது, கடந்த வாரம் இளையாராஜாவின் பாடல்களை தேர்வு செய்து பாடும் சுற்று நடைபெற்றது. இளையராஜாவின் மூத்த மகன் கார்த்திக் ராஜா அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்று இருந்தார். 

இதனை தொடர்ந்து இந்த வாரம் மணிரத்தினத்தின் மௌனராகங்கள் சுற்று ஒளிபரப்பாக உள்ளது. இதுகுறித்த ப்ரோமோ வீடியோக்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பாராட்டையும் பெற்று வருகிறது. 

மேலும் படிக்க | சலார் படத்தில் பிரபாஸ் வாங்கிய சம்பளம் மட்டும் இவ்வளவா..!

அதாவது, சரிகமப நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் அனைவரையும் நடிகர்களாக்கி வித்தியாசமான முறையில் ப்ரோமோ வீடியோ எடுக்கப்பட்டு அது வெளியிடப்படுகிறது. வித்தியாசமான இந்த ப்ரோமாவை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வரும் ஜீ தமிழ் அனைவரின் பாராட்டுக்களையும் பெற்றுவருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் சிங்கிங் ஷோனு தானே சொன்னீங்க, ஆனால் கண்டெஸ்டன்ட் எல்லாம் பயங்கரமாக ஆக்ட் பண்றாங்க என்று கமெண்ட் அடித்து வருகின்றனர். 

இன்னொரு ப்ரோமோ வீடியோவில் வீறாப்பாண்டி பாடிய பாடலை கேட்ட நடுவர்கள் இது பிளாட்டினம் பெர்பாமன்ஸ் என பாராட்டி புகழ்ந்து தள்ளியுள்ளனர்.

மேலும் படிக்க | Prabhas : நடிகர் பிரபாஸிற்கு திருமணம்!? மணப்பெண் இவரா? வைரலாகும் இன்ஸ்டா பதிவு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News