2014 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று பாஜக தலைமையிலான அரசு மத்தியில் ஆட்சி அமைத்தது. பிரதமராக நரேந்திர மோடி செயல்பட்டு வந்தார். இதனையடுத்து இந்த ஆண்டுடன் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி முடிவு பெறுகிறது. இன்னும் இரண்டு மாதங்களில் மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து அரசியல் கட்சிகளும் தயாராகி வருகிறது. இந்தநிலையில் இன்று மக்களவை தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது.
வரும் 2019 ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக போட்டியிடும் ஆண்-பெண் வேட்பாளர்களுக்கான பட்டியல் மற்றும் அவர்கள் போட்டியிடும் தொகுதி விவரங்களை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் இன்று வெளியிட்டுள்ளார்.
அறிவிப்பு:
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக போட்டியிடவிருக்கும் ஆண்-பெண் வேட்பாளர்களுக்கானத் தொகுதி விவரங்களை தலைமை ஒருங்கிணைப்பாளர் #சீமான் வெளியிட்டுள்ளார்.https://t.co/Xa7JaRIo4t#Seeman #Tamilnadu #2019Elections #MaleFemaleEquality #NaamTamilar pic.twitter.com/Agd7QJX0Ny
— நாம் தமிழர் கட்சி (@NaamTamilarOrg) 13 பிப்ரவரி, 2019