நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள மஞ்சுவிளையை சேர்ந்தவர் ஜெயராஜ். இவருடைய மகன் விஜய்ரூபன். களக்காடு பகுதியில் லவ் பேர்ட்ஸ் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். மேலும் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் களக்காடு நகராட்சி 2வது வார்டில் நாம் தமிழர் கட்சி சார்பாக போட்டியிட்டு தோல்வியையும் தழுவியுள்ளார். விஜய்ரூபன் மேலபத்தை பகுதியைச் சேர்ந்த தனது உறவினர் பெண்ணை 4 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். மேலும் அந்த பெண்ணின் தந்தையிடம் திருமண செய்ய பெண் கேட்டபோது, திருமணம் செய்து கொடுக்க மறுத்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த 10 தினங்களுக்கு முன்பு அப்பெண்ணிற்கு வேறு இடத்தில் திருமணம் நிச்சயமாகியுள்ளது. இதனை அறிந்த விஜய் அப்பெண்ணுடன் ஜோடியாக எடுத்த புகைப்படம் மற்றும் அவர் கொடுத்த கடிதம் ஆகியவற்றை போஸ்டர் அடித்து, களக்காடு நகர் பகுதி முழுவதிலும் கவிதை வசனத்தோடு சுவரொட்டியாக ஒட்டியுள்ளார். குறிப்பாக அப்பெண்ணிற்கு நிச்சயம் செய்த மாப்பிளை வீட்டின் முன்பும் சுவரொட்டியை ஓட்டியுள்ளார்.
மேலும் படிக்க | சமூக வலைத்தளங்களில் குழந்தைகளை மிரட்டிய நபர் கைது!
இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பெண்ணின் தந்தை களக்காடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் களக்காடு போலீசார் விசாரணை செய்து விஜய்ரூபனை தேடி வருகின்றனர்.தற்போது நாம் தமிழர் கட்சியின் நிர்வாகியான விஜய் ரூபன் தலைமறைவாகியுள்ளார் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR