பெண் குழந்தைகள் பிறப்பு சதவீதம் உயர்விற்காக திருவள்ளூர் மற்றும் நாமக்கல் மாவட்டங்களுக்கு மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி விருது அளித்துள்ளார்!
கடந்த 2015-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 22-ஆம் நாள் ‘பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளை படிக்க வைப்போம்’ என்ற திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி அரியானாவில் தொடங்கி வைத்தார். முதலில் நாடு முழுவதும் 100 மாவட்டங்களில் தொடங்கப்பட்ட இந்த திட்டம் பின்னர் 640 மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டது.
திருவள்ளூர் மாவட்ட பெண் குழந்தைகளை பாதுகாப்போம்; பெண் குழந்தைகளை படிக்க வைப்போம் திட்டக் குழுவினர் சமூகத்தினரிடையே ஏற்படுத்தி வரும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தலைசிறந்து விளங்குகின்றன. பெருமைக்குரிய விருதினைப் பெற்றுள்ள திட்டக் குழுவினருக்கு வாழ்த்துக்கள் pic.twitter.com/5sgQBGI5AM
— Smriti Z Irani (@smritiirani) September 6, 2019
பெண்களுக்கு அதிகாரம் அளித்தல், பெண் குழந்தைகள் பிறப்பு சதவீதத்தை அதிகரித்தல் ஆகியவற்றை நோக்கமாக கொண்டு இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திய மாவட்டங்களுக்கு நேற்று விருது வழங்கும் விழா நடைப்பெற்றது.
டெல்லியில் நடைபெற்ற விழாவில் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் ஸ்மிரிதி இரானி கலந்துகொண்டு விருதுகளை வழங்கினார். நாடு முழுவதும் இருந்து 10 மாவட்டங்கள் விருது பெற தேர்ந்து எடுக்கப்பட்டன. இதில் தமிழகத்தில் இருந்து திருவள்ளூர் மற்றும் நாமக்கல் மாவட்டங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு இருந்தன.
பாலின விகதத்தில் இடையறாது முன்னேற்றம் கண்டுவரும் தமிழ் நாட்டின் நாமக்கல் மாவட்டம், 2019ம் ஆண்டுக்கான பெண் குழந்தைகளை பாதுகாப்போம்; பெண் குழந்தைகளை படிக்க வைப்போம் திட்ட பாராட்டு விழாவில் விருது பெற்றுள்ளது. திட்டக் குழுவினரின் உழைப்பிற்கு எனது பாராட்டுகள். pic.twitter.com/JObwQkiqp8
— Smriti Z Irani (@smritiirani) September 6, 2019
திருவள்ளூர் மாவட்டத்துக்கான விருதை மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமாரும், நாமக்கல் மாவட்டத்துக்கான விருதை மாவட்ட ஆட்சியர் ஆசியா மரியமும் பெற்றுக்கொண்டனர்.