கடந்த 2017-ம் ஆண்டு சென்னை ஆழ்வார்பேட்டையைச் சேர்ந்த பெண் ஒருவர், இந்திய தொல்லியல் துறையினரிடம் நடராஜர் சிலை ஒன்றை காண்பித்து, அது பழங்கால சிலை இல்லை என்று சான்றிதழ் வழங்க விண்ணப்பித்தார். ஜெர்மனிக்கு அந்த சிலையை கொண்டு செல்லவும் அவர் அனுமதி கோரினார். ஆனால் தொல்லியல் துறையினர், அந்த சிலை பழங்கால சிலை இல்லை என்று சான்றிதழ் கொடுக்க மறுத்துவிட்டனர்.
குறிப்பிட்ட அந்த நடராஜர் சிலை சென்னை சாத்தங்காடு பழைய இரும்பு பொருட்கள் விற்பனை செய்யும் மார்க்கெட்டில் உள்ள கடை ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக தகவல் கிடைத்தது. அந்த கடையில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு தனிப்படை போலீசார் சோதனை நடத்தினார்கள்.
அப்போது, குறிப்பிட்ட பழங்கால நடராஜர் சிலை அங்கு பதுக்கிவைக்கப்பட்டிருப்பது தெரியவந்து கைப்பற்றப்பட்டது. 4½ அடி உயரம் உள்ள அந்த ஐம்பொன் சிலை பல கோடி ரூபாய் மதிப்புடையது. ஆயிரத்து 200 ஆண்டுகள் பழமையானது. சோழர் காலத்தைச் சேர்ந்த அந்த சிலை எந்த கோவிலில் திருடப்பட்டது, யாரால் திருடப்பட்டது என்பது தெரியவில்லை. இதுகுறித்து சிலை பதுக்கி வைக்கப்பட்டிருந்த கடை உரிமையாளர் பார்த்திபனிடம் விசாரணை நடக்கிறது. அந்த சிலைக்கான ஆவணம் எதுவும் அவரிடம் இல்லை. எனவே அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | தடயத்தை அழிக்க திருடன் செய்த காரியத்தை பாருங்கள் -சிசிடிவி காட்சி
கைப்பற்றப்பட்டுள்ள இந்த சிலை தமிழக கோவில்களில் உள்ள 3-வது பெரிய நடராஜர் சிலை ஆகும். ஆசியாவிலேயே மிகப்பெரிய ஐம்பொன் சிலை நெய்வேலி நடராஜர் கோயிலில் உள்ளது. இது சுமார் 12 அடிஉயரம், 1.25 டன் எடை கொண்டது. 9 அடி கொண்ட 2-வது உயரமான நடராஜர் சிலை, மயிலாடுதுறை மாவட்டம் கோனேரிராஜபுரம் நடராஜர் கோயிலில் இருப்பதாக நம்பப்படுகிறது. 2018-ல் அதிராம்பட்டினத்தில் நிலம் தோண்டிய போது 4.5 அடிஉயர நடராஜர் சிலை கண்டெடுக்கப்பட்டது. அதுவும், தற்போது கிடைத்திருப்பதும் ஆசியாவின் 3-வது மிகப்பெரிய சிலையாக இருக்கக்கூடும். சிலையை எடுக்கும் போது சேதமடைந்த சிலையின் அடிப்பகுதி சரி செய்யப்பட்டிருக்கிறது. இதுபற்றி தொடர்ந்து விசாரணை நடக்கிறது என சிலை கடத்தல் பிரிவு டிஜிபி ஜெயந்த் முரளி தெரிவித்தார்.
மேலும் படிக்க: இந்தியாவையே நடுநடுங்க வைத்த தக்கர் கொள்ளையர்கள்.! வரலாற்றின் பின்னணி
மேலும் படிக்க: சிசிடிவி கேமராவை துணியால் மறைத்து பூட்டை உடைத்து தங்க நகைகள் திருட்டு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ