NEET தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்ப அவகாசம் நீட்டிப்பு: மத்திய அரசு!

கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களில் நீட் மருத்துவ தகுதி தேர்விற்கு விண்ணப்பிக்க கூடுதல் கால அவகாசம் வழங்குவது குறித்து ஆலோசிக்கப்படுகிறது என்று மத்திய மனிதவள ஆணையம் தெரிவித்துள்ளது! 

Last Updated : Nov 27, 2018, 04:34 PM IST
NEET தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்ப அவகாசம் நீட்டிப்பு: மத்திய அரசு!   title=

கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களில் நீட் மருத்துவ தகுதி தேர்விற்கு விண்ணப்பிக்க கூடுதல் கால அவகாசம் வழங்குவது குறித்து ஆலோசிக்கப்படுகிறது என்று மத்திய மனிதவள ஆணையம் தெரிவித்துள்ளது! 

நீட் தேர்வுக்கு இணையதளத்தில் விண்ணப்பிக்க இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில், கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என கஜா புயல் பாதித்த டெல்டா மாவட்ட மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

MBBS, BDS ஆகிய மருத்துவப் படிப்புகளில் சேர நீட் தேர்வில் வெற்றிபெறுவது கட்டாயம் என்பதால், நீட் தேர்வுக்கு நவம்பர் 1 ஆம் தேதி முதல் வரும் 30 ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்குமாறு அறிவிக்கப்பட்டது.

அதன்படி, நாடு முழுவதும் பனிரெண்டாம் வகுப்பு மாணவ, மாணவிகள் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்து வரும் நிலையில், கஜா புயல் பாதித்த மாவட்டங்களில் நீட் தேர்வுக்கு மாணவ, மாணவிகள் விண்ணப்பிப்பதில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

கஜா புயலால், பல பகுதிகளில் இன்னும் மின் விநியோகம் சீரடையாததால், இணையதள சேவையை பயன்படுத்த முடியாத நிலையில் மாணவ, மாணவிகள் உள்ளனர்.நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கு இன்னும் 3 நாட்களே கால அவகாசம் இருக்கும் நிலையில், பள்ளிக் கல்வித்துறையுடன் இணைந்து, சில தன்னார்வ அமைப்புகள் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் வாய்ப்பை இலவசமாக ஏற்படுத்தி தந்துள்ளன.

அடுத்த ஆண்டு மே மாதம் 5 ஆம் தேதி நாடு முழுவதும் நடைபெறவுள்ள நீட் தேர்விற்கு விண்ணப்பிக்க வரும் 30 ஆம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த காலக்கெடு முடிய 3 நாட்களே உள்ளது. இதனால் நீட் தேர்விற்கு விண்ணப்பிக்க கூடுதல் கால அவகாசம் வழங்க வேண்டுமென பாதிக்கப்பட்ட மாணவர்களும், கல்வியாளர்களும் வலியுறுத்தியுள்ளனர். 
மேலும் தமிழக அரசு சார்பிலும் மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் இதுகுறித்து பரிசீலனை செய்யப்படும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தேசிய தேர்வு முகமையுடன் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

 

Trending News