குமரிக்கடலில் நெதர்லாந்து படகு - பிடிபட்டது யார் ?

Netherland Boat In Netherland : குமரி மாவட்டம் இரையுமன்துறை கடற்பகுதியில் நங்கூரமிட்டு நிற்கும் வெளிநாட்டுப் படகு. எப்படி வந்தது ?  

Written by - நவீன் டேரியஸ் | Last Updated : Jun 5, 2022, 12:56 PM IST
  • குமரிக் கடலில் நெதர்லாந்து படகு
  • வெகுநேரமா நின்றதால் பொதுமக்கள் அச்சம்
  • கப்பலையும், அதில் இருந்த நபரை சிறைப்பிடித்த கடற்படை
குமரிக்கடலில் நெதர்லாந்து படகு - பிடிபட்டது யார் ? title=

கன்னியாகுமரி மாவட்டம் இரையுமன்துறை கடற்கரை பகுதியில் இருந்து சுமார் 2 மீட்டர் தொலைவில் ஒரு வெளிநாட்டுப் படகு ஒன்று நின்றுகொண்டிருந்தது. பல மணி நேரமாக அந்தப் படகு அதே இடத்தில் நின்றுகொண்டிருந்ததால் சந்தேகமடைந்த பொதுமக்கள் கடலோர காவல்படைக்கு தகவல் அளித்தனர். அவர்கள் இந்திய கடற்படையினருக்கு தகவல் தெரிவித்துவிட்டு, படகை கண்காணிக்க துவங்கி உள்ளனர். ஒருசில மணி நேரத்தில் இந்திய கடற்படையினர் இரையுமன்துறை பகுதிக்கு கப்பலில் வந்தனர். 

மேலும் படிக்க | கடல் வழியாக துறைமுகத்தை முற்றுகையிட்ட மீனவர்கள் - பழவேற்காட்டில் பதற்றம்.!

பின்னர், சிறிய படகு மூலம் வெளிநாட்டு படகின் அருகில் சென்று கடலோர காவல்படையினர் விசாரணை நடத்தினர். அப்போது அந்த படகினுள் வெளிநாட்டு நபர் ஒருவர் மட்டும் கால்களில் பலத்த காயங்களுடன் இருந்துள்ளார். இதனையடுத்து அந்த நபரிடம் அவர்கள் விசாரணை நடத்தினர். அதில், நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஜெறோயின் என்பது தெரியவந்தது. படகு ஓட்டுதல் பயிற்றுனராக இருந்து வருவதாகவும், அவ்வப்போது கொச்சி துறைமுகம் வந்து அங்குள்ள நபர்களுக்கு படகு ஓட்டுநர் பயிற்சி வழங்கி வருவதாகவும் தெரிவித்துள்ளார். 

மேலும் தற்போது படகில் வந்துகொண்டிருந்த போது கயிறு காலில் சிக்கி காயம் ஏற்பட்டதாகவும், அருகில் இருக்கும் துறைமுகத்தில் கரை ஒதுங்கி மருத்துவ சிகிச்சை பெற வேண்டி தேங்காய்பட்டிணம் துறைமுகத்தை பார்த்து வந்ததாகவும் கூறியுள்ளார். ஆனால், கடல் சீற்றம் அதிகமாக இருந்தால் கரை ஒதுங்க முடியாமல் நங்கூரமிட்டு நின்றுகொண்டிருப்பதாகவும் கடலோர காவல்படையிடம் கூறியுள்ளார். இதனையடுத்து அவரது பாஸ்போர்ட்டை பரிசோதித்த கடற்படையினர் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்துவிட்டு அங்கிருந்து திரும்பி சென்றுள்ளனர். 

இந்த நிலையில் அந்த நபர் அதே படகில் கடலில் நங்கூரமிட்டு கரை திரும்ப முடியாமலும், திரும்பி வந்த இடத்திற்கு செல்ல முடியாமலும் பரிதவித்து வந்துள்ளார். ஆனாலும், அந்தப் படகில் இருக்கும் நபர் மீது சந்தேகம் கொண்ட கடலோர காவல்படையினர், அந்தப் படகை கயிறுகட்டி இழுத்து வந்து தேங்காய்ப்பட்டணம் துறைமுகம் சேர்த்தனர். இதையடுத்து, விடிய விடிய நெதர்லாந்து நபரிடம் விசாரணை நடத்தப்பட்டது. 

மேலும் படிக்க | சும்மா வாங்குன லாட்டரி சீட்டுக்கு 10 கோடி ரூபாய் பரிசு.!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News