சட்டப்பேரவையில் தொழில் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் இன்று நடைபெற்றது. ஓசூரில் புதிய பன்னாட்டு விமான நிலையம் உருவாக உள்ளதாகவும், இதற்கு தமிழக அரசு முயற்சி மேற்கொண்டு வருவதாகவும் தொழில்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கே.பி முனுசாமி நன்றி தெரிவித்துப் பேசினார்.
தமிழக அரசு ஓசூரில் சிப்காட் மற்றும் புதிய விமான நிலையம் அமைக்கும் எனத் தெரிவித்துள்ளது வரவேற்கத்தக்கது என்றும், ஓசூரில் விமான நிலையம் அமைந்தால் பெங்களூரு விமான நிலையத்தை விட பரபரப்பாக இருக்கும் எனவும் கே.பி.முனுசாமி தெரிவித்தார். அதேபோல் கடந்த ஆட்சியில் பெறப்பட்ட முதலீடுகளை முதல்வர் காகிதக் கப்பல் எனக் கூறியதாகத் தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்துப் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், காகிதக் கப்பல் எனத் தான் அந்த அர்த்தத்தில் கூறவில்லை என விளக்கம் அளித்தார். ''தொழில்துறையில் தமிழகம் மிக வேகமாக முன்னேறி வருகிறது. புதிய முதலீடுகளைப் பெறுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டு வருகின்றன. கடந்த 10 மாதத்தில் 131 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் 69.37 லட்சம் கோடி மதிப்பீட்டில் போடப்பட்டுள்ளன.
மேலும் படிக்க | தீரன் பட பாணியில் வேட்டையாடிய கும்பல் - கதிகலங்கிய கண்டமங்கலம்..!
மேலும் இந்த ஒப்பந்தங்களை முதலீடாகக் கொண்டுவருவது முக்கியம் , அதன்படி புதிய முதலீடு, தொழிற்சாலை வேலைவாய்ப்புகள் சென்னையைச் சுற்றி மட்டும் இல்லாமல் , தமிழகம் முழுவதும் சென்றடைய வேண்டும் என அரசு பணியாற்றி வருகிறது..
வளர்ச்சி குறைந்த மாவட்டங்களுக்கு வளர்ச்சிகள் சென்றடைய வேண்டும் என்பதில் குறிக்கோளாக உள்ளோம். 2021 ஏப்ரலிலிருந்து டிசம்பர் வரையிலான அந்நிய முதலீடு 4 விழுகாட்டிலிருந்து 5 விழுக்காடாக உயர்ந்துள்ளது.10 வருடத்தில் நடைபெறாத தொழில் வளர்ச்சி கடந்த 10 மாதத்தில் நடத்தி இருக்கிறோம்.
சட்டம்- ஒழுங்கு பிரச்சினை நடைபெறாமல் இருந்தால் மட்டுமே தொழில் வளர்ச்சி பெறும். தமிழகத்தைத் தொழில்துறை மாநிலமாக மாற்றுவோம். அதற்கு ஆளும் கட்சி எதிர்க்கட்சி என பாராமல் அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்'' என முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.
ஓசூரில் விமான நிலையம் அமைக்கும் அரசின் முடிவு முன்னதாகவே எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதற்காக பெங்களூரு விமான நிலைய நிர்வாகத்திடம் இருந்து தடையில்லாச் சான்றிதழ் பெறப்பட்டுள்ளது நினைவுகூரத்தக்கது.
மேலும் படிக்க | எருமை மாடும்தான் கருப்பு அதுக்காக அது திராவிடரா? சீமான் கேள்வி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
ஃபேஸ்புக்கில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR