தீரன் பட பாணியில் வேட்டையாடிய கும்பல் - கதிகலங்கிய கண்டமங்கலம்..!

விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அருகே பவாரியா கும்பலை போல முகமூடி அணிந்து வீட்டிற்குள் நுழைந்த கும்பல், நடு இரவில் தாக்குதலை அரங்கேற்றி தங்கம் மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றது.   

Written by - Gowtham Natarajan | Last Updated : Apr 19, 2022, 11:54 AM IST
  • வீட்டிற்கு நுழைந்த உறங்கியவர்கள் மீது தாக்குதல்
  • நடு இரவில் நடந்தேறிய பயங்கரம்
  • 10 சவரன் நகை, ரூ48ஆயிரம் பணம் கொள்ளை
தீரன் பட பாணியில் வேட்டையாடிய கும்பல் - கதிகலங்கிய கண்டமங்கலம்..! title=

விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அருகே உள்ளது பூஞ்சோலைகுப்பம் கிராமம். விடிந்ததும் வயலுக்கு புறப்பட்டுச் செல்லும் விவசாயிகள் வீட்டிலேயே முடங்கி கிடந்தார்கள். ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருக்கும் கலையரசி என்பவருக்கு சொந்தமான வீட்டை போலீசார் பாதுகாப்பு வலையத்திற்குள் கொண்டுவந்திருந்தார்கள். கலையரசி தலையில் பலத்த காயமடைந்து கட்டுபோட்டு வீட்டிற்கு வெளியே அமர்ந்திருந்தார். வந்திருந்த போலீசார் கலையரசியிடம் எதையோ விசாரித்துக்கொண்டிருந்தனர். அவரருகே  தண்ணீர் குடங்கள் உடைக்கப்பட்டு வீட்டில் இருந்த பொருட்கள் சிதறிக்கிடந்தது. வீட்டிற்குள் கதவுகள் உடைக்கப்பட்டு, பொருட்கள் சூறையாடப்பட்டிருந்தது. 

பெரும் அசம்பாவிதம் நடந்திருப்பதை இது காட்சிப்படுத்தியது. ஆனால் இதற்கெல்லாம் காரணம் குடும்ப சண்டையோ, முன்விரோதமோ இல்லை... படுபயங்கர கும்பல் 

kandamangalam

அதுவும் தீரன் படத்தில் வரும் பவாரியா கும்பலை போன்று வீட்டிற்குள் நுழைந்து வேட்டையாடிய கொடூரக் கும்பல்.... சம்பவத்தன்று நடு இரவு... ஊரே உறங்கிய நேரம் பார்த்து நான்கு பேர் கொண்ட கும்பல் ஊருக்குள் நுழைந்தது. கலையரசியின் வீட்டை சுற்றி வளைத்தவர்கள் சுவரேறி உள்ளே குதித்தனர். அங்கிருந்து அசுற வேகத்தில் நெருங்கியவர்கள் கதவை கடப்பாரையால் உடைத்து உள்நுழைந்தனர். அப்போது வீட்டிற்குள் படுத்திருந்தவர்கள் சத்தம் கேட்டு சட்டென்று விழித்துக்கொண்டார்கள். ஆனால் அவர்களால் தப்பிக்க முடியவில்லை. நுழைந்த வேகத்தில் கையில் வைத்திருந்த கொடூர ஆயுதங்களால் கணவன் மனைவி இருவரையும் கொடூரமாக தாக்கினார்கள். அதில் கலையரசியின் தலையில் பலத்த காயமடைந்து நிலைகுலைந்து போனார். அப்போதுதான் மர்ம கும்பலின் திட்டம் நிறைவேறியது. வீட்டில் வைத்திருந்த 10 சவரன் நகைகள் மற்றும் 48 ஆயிரம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்து தப்பியோடினர். அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் கலையரசியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து கண்டமங்கலம் போலீசாருக்கு தகவல் கொடுத்திருக்கிறார்கள். ஊரே தேடியும் கொள்ளையர்களை பிடிக்க முடியாமல் போனது. 

kandamangalam

மேலும் படிக்க | ‘கை கால்கள் உடைந்தால்’ போலீஸ்தான் காரணம் - கதறிய ரவுடி ‘மதுரை பாலா’..!

இன்னொரு அதிர்ச்சி என்னவென்றால், கொள்ளையர்களின் வேட்டை கலையரசியின் வீட்டில் முதல்முறை அல்ல. இது இரண்டாவது முறை. கலையரசியின் கணவர் ராஜன் புதுச்சேரி மார்க்கெட்டில் வாழைப்பழ மண்டி வைத்து நடத்தி வருகிறார். நீண்ட கனவுகளோடு வாழ்க்கையை தொடங்கியவர் சிறுக சிறுக பணத்தை சேர்த்து சொந்தமாக இடம் வாங்கி வீடு கட்டினார். பால் காய்ச்சி குடியேறி 15வது நாளில் 2முகமூடி கொள்ளையர்கள் வீட்டிற்குள் நுழைந்து ஒன்றரை சவரன் தங்க நகையையும், 1.18 லட்சம் ரூபாய் பணத்தையும் கொள்ளையடித்து சென்றனர். அதுகுறித்து ஏற்கனவே கண்டமங்கலம் காவல்நிலையத்தில் புகாரளிக்கப்பட்டு விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், மீண்டும் தற்போது இந்த பயங்கரம் அரங்கேறிப்போனது. புதுவீடு கட்டி இரண்டு மாதம்கூட முடிவடையாத நிலையில் ராஜன் கலையரசியின் நிம்மதி உடைந்து போனது. போலீசாரின் போடியில் வேட்டையாடி கொள்ளையர்கள் சிக்கினால் மட்டுமே இவர்களின் கண்ணீருக்கு காசுக்கும் விடை கிடைக்கும்... சிக்குவார்கள் காத்திருந்துபார்ப்போம்....

மேலும் படிக்க | 17 வயது இளம்பெண் வெறிச்செயல் - கழுத்து நெறித்து மூதாட்டி கொலை..!

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

ஃபேஸ்புக்கில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

 

Trending News