சென்னையில் பல்வேறு இடங்களில் தேசிய புலனாய்வு முகமை (NIA) அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். ஓட்டெரி,திருவொற்றியூர் உள்ளிட்ட பகுதிகளில் NIA அதிகாரிகள் காலையில் இருந்து திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மயிலாடுதுறையில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்துடன் தொடர்புடைய 5 பேர் கைதான நிலையில், என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களுக்கு தொடர்புடைய சென்னை, மயிலாடுதுறை, காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் 9 இடங்களில் இன்று காலைமுதல் நடத்தி வருகின்றனர். சென்னையில் பல்வேறு இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி வரும் நிலையில் என்.ஐ. ஏ வழக்குகளில் தொடர்புடையவர்களின் வீடுகளில் அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
மேலும் படிக்க | இணையும் இரு துருவங்கள்! அமமுகவுடன் இணைந்து செயல்பட ஓபிஎஸ் முடிவு
ஓட்டேரி, திருவொற்றியூர் உள்ளிட்ட இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளின் சோதனை நடைபெற்று வருகிறது. தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்பில் இருப்பவர்களாக கருதப்படும் நபர்களின் வீடுகளிலும் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. இதேபோன்று மதுரை, தேனி மற்றும் திருச்சி ஆகிய மாவட்டங்களிலும் 8-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. தடை செய்யப்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினருடன் தொடர்பில் உள்ளார்களா என விசாரணை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழனி நேதாஜி நகரில் வசித்து வரும் மத்திய அரசால் தடை செய்யப்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் மதுரை மண்டல தலைவர் முகமது கைசர் என்பவர் வீட்டில் மதுரையில் இருந்து வந்த ஐந்து பேர் கொண்ட அதிகாரிகள் NIA சோதனை நடைபெற்று வருகிறது.
மேலும் படிக்க | ஓ பன்னீர்செல்வத்தை வெக்கங் கெட்டவர்கள் என கூறிய அதிமுக கேபி முனுசாமி!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ