தமிழகத்தை நெருங்கும் ஓமிக்ரான் - கேரளாவில் ஒருவருக்கு பாதிப்பு

Corona: தமிழகத்தின் அண்டை மாநிலங்களான கேரளா, அந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் ஓமிக்கிரான் பாதிப்பு உறுதிசெய்யப்பட்டிருப்பது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது

Written by - S.Karthikeyan | Last Updated : Mar 2, 2023, 11:12 AM IST
தமிழகத்தை நெருங்கும் ஓமிக்ரான் - கேரளாவில் ஒருவருக்கு பாதிப்பு title=

கொரோனா வைரஸின் புதிய மாறுபாடான ஓமிக்ரான் வைரஸ், தென் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டது. அங்கு வேகமாக பரவிய வைரஸ், பிரிட்டன், அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளுக்கும் பரவத் தொடங்கியது. இதனால், ஆப்பிரிக்கா நாடுகளில் இருந்து வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. மற்ற நாடுகளிலும் ஓமிக்ரான் பரவியதையடுத்து, இந்தியாவுக்கு வரும் அனைத்து வெளிநாட்டு பயணிகளுக்கும் கொரோனா மற்றும் ஓமிக்ரான் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ALSO READ | Breaking: ஆந்திரா, சண்டிகரில் நுழைந்தது ஓமிக்ரான் தொற்று, அதிகரிக்கும் எண்ணிக்கை

ஏற்கனவே தமிழகத்தையொட்டிய அண்டை மாநிலங்களான ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் ஓமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் தற்போது கேரளாவிலும் ஓமிக்ரான் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. கடந்த 6 ஆம் தேதி இங்கிலாந்தில் இருந்து கேரள மாநிலம், கொச்சி வந்த ஒருவருக்கு ஓமிக்ரான் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அவருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனை கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார். அவருடன் வந்த தாய் மற்றும் மனைவி ஆகியோருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் அவர்களுக்கும் கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக கூறினார்.

ALSO READ | Mask: இதுதான் உண்மையான கொரோனா மாஸ்க்! வைரஸ் வந்தால் ஒளிரும் முகக்கவசம்

மேலும், அவர்களுடன் விமானத்தில் வந்த 149 பேருக்கும் இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ள அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா சார்ஜ், மக்கள் இதனால் பீதியடைய வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டுள்ளார். இதன் மூலம் இந்தியாவில் இதுவரை ஓமிக்ரான் வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 38 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக முதன்முதலாக ஓமிக்ரான் வைரஸ் தொற்று கண்டறியப்பட்ட மகாராஷ்டிரா மாநிலத்தில் 18 பேர் ஓமிக்ரான் வைரஸூக்காக சிகிச்சை பெற்று வருகின்றனர். ராஜஸ்தானில் 9 பேரும், கர்நாடகாவில் 6 பேரும், டெல்லியில் 2 பேரும் ஓமிக்ரானுக்காக சிகிச்சை பெறுகின்றனர். ஆந்திரா, சண்டிகரில் தலா ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தையொட்டியுள்ள அனைத்து மாநிலங்களிலும் ஓமிக்ரான் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால், தமிழகத்துக்கும் ஓமிக்ரான் வந்துவிடுமோ என மக்களிடையே அச்சம் எழுந்துள்ளது. இருப்பினும், தமிழக அரசு பரிசோதனை மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருவதால் மக்கள் அச்சமடைய வேண்டாம் என தமிழக சுகாதாரத்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News