1 கிலோ வெங்காயம் ரூ.50க்கு: முண்டியடித்து கொண்டு வாங்கிய பொதுமக்கள்

திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு கிலோ வெங்காயம் 50 ரூபாய்க்கு விற்பனை செய்ததால் மக்கள் முண்டியடித்துக் கொண்டு வாங்கினர்.

Updated: Dec 10, 2019, 11:34 AM IST
1 கிலோ வெங்காயம் ரூ.50க்கு: முண்டியடித்து கொண்டு வாங்கிய பொதுமக்கள்

திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு கிலோ வெங்காயம் 50 ரூபாய்க்கு விற்பனை செய்ததால் மக்கள் முண்டியடித்துக் கொண்டு வாங்கினர்.

நாடு முழுவதும் வெங்காயத்தின் விலை நாளுக்கு நாள் உயர்ந்துகொண்டே செல்கிறது. விலை ஏற்றம் அடைந்துள்ளதால் சில ஓட்டல்களில் வெங்காயத்தை அதிகமாக சேர்த்து செய்யப்படும் உணவு வகைகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. தொடர் மழையால் விளைச்சல் பாதிப்பு காரணமாக தமிழகம் உள்பட நாடு முழுவதும் வெங்காயம் விலை உச்சத்தில் இருக்கிறது.

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் ஒருகிலோ சின்ன வெங்காயம் 200 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. பெரிய வெங்காயம் கிலோ 180 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இந்த நிலையில் திருவள்ளூரில் நேதாஜி சாலையில் ஆந்திர மாநில வியாபாரி ஒருவர் ஒரு கிலோ வெங்காயம் 50 ரூபாய்க்கு விற்பனை செய்ததுள்ளார். இதனால் பெரியவர் முதல் பள்ளி செல்லும் மாணவ மாணவிகள் வயதான முதியோர் என அனைத்து தரப்பு மக்களும் வீட்டில் இருந்த கைப்பையை எடுத்துக்கொண்டு ஆர்வத்துடன் வெங்காயத்தை வாங்கி சென்றனர்.

விற்பனைக்கு வந்த அரை மணிநேரத்தில் மொத்த வெங்காயமும் விற்று தீர்ந்தது என்று வெங்காய வியாபாரி தெரிவித்துள்ளார்.