மத்திய அரசு புதிதாக முதுகலை மருத்துவ கல்வி வரைவை அறிமுகம் செய்துள்ளது. இந்த வரைவு நடைமுறைக்கு வந்தால், ஒவ்வொரு மாநிலத்திலும் இருக்கும் இட ஒதுக்கீடு முறையைப் பின்பற்றி முதுகலை மருத்துவ படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடத்த முடியாத சூழல் ஏற்படுக்கூடும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் முதுகலை மருத்துவக் கல்வி வரைவுக்கு தமிழக அரசின் எதிர்ப்பை தெரிவித்து மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவுக்கு தமிழ்நாடு முதல்வர் மு,க.ஸ்டாலின் (Tamil Nadu CM MK Stalin) கடிதம் எழுதியுள்ளார். அதில்,
மாநில அரசுகளின் ஒதுக்கீட்டின் கீழ் முதுகலை மருத்துவ சேர்க்கையில் தற்போதைய நிலையே தொடர வேண்டும். இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
தேசிய மருத்துவ ஆணையத்தின் முதுகலை மருத்துவக் கல்வி வரைவுக்கு தமிழ்நாடு அரசின் எதிர்ப்பைத் தெரிவித்து, மாண்புமிகு ஒன்றிய சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை அமைச்சர் @mansukhmandviya அவர்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்கள் கடிதம் எழுதியுள்ளார். pic.twitter.com/qmH6zfWzGs
— CMOTamilNadu (@CMOTamilnadu) July 31, 2021
"மாநில அரசுகளின் ஒதுக்கீட்டின் கீழுள்ள முதுகலை மருத்துவ சேர்க்கையில் தற்போதுள்ள நிலையே தொடர வேண்டுமென்றும் வலியுறுத்தியும். தேசிய மருத்துவ ஆணையத்தின் முதுகலை மருத்துவக் கல்வி வரைவுக்குத் தமிழ்நாடு அரசின் எதிர்ப்பைத் தெரிவித்தும், மாண்புமிகு ஒன்றிய சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை அமைச்சர் மன்சுக் மண்டாவியாவுக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ALSO READ | தமிழகத்தில் ஆகஸ்ட் 9 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது: முதல்வர் மு.க. ஸ்டாலின்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR