கொடநாடு விசாரணைக்கு அப்போ எதிர்ப்பு இப்போது போராட்டம் - ஓபிஎஸ்-ன் மற்றொரு யூடர்ன்

கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு விசாரணை கிடப்பில் போட்டிருக்கும் தமிழக அரசைக் கண்டித்து போராட்டம் நடத்த இருப்பதாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். இந்த விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவரே எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்து 2 ஆண்டுகளுக்கு முன்பு போராட்டம் நடத்தியுள்ளார்.   

Written by - S.Karthikeyan | Last Updated : Jul 11, 2023, 04:56 PM IST
  • ஓ.பன்னீர்செல்வத்தின் மற்றொரு யூ டர்ன்
  • கொடநாடு விசாரணைக்கு அப்போது எதிர்ப்பு
  • இப்போது விசாரணை கோரி போராட்டம் அறிவிப்பு
கொடநாடு விசாரணைக்கு அப்போ எதிர்ப்பு இப்போது போராட்டம் - ஓபிஎஸ்-ன் மற்றொரு யூடர்ன் title=

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கை விரைந்து விசாரிக்க கோரி ஆகஸ்ட் 1 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அவரது வீட்டில் தனது ஆதரவாளர்களான பன்ருட்டி ராமச்சந்திரன் மற்றும் வைத்திலிங்கம் உள்ளிட்டோருடன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் விசாரணையை துரிதப்படுத்த தமிழ்நாடு அரசை வலியுறுத்தி ஆகஸ்ட் 1 ஆம் தேதி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம் என்ற அறிவிப்பை வைத்திலிங்கம் வாசித்தார்.

மேலும் படிக்க | ஸ்டாலினிடம் இருந்து விலகியிருக்கும் துரைமுருகன் - அதிருப்திக்கு என்ன காரணம்?

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர் செல்வம், " கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கை தமிழக அரசு கிடப்பில் போட்டுள்ளது. திமுகவின் தேர்தல் வாக்குறுதியாக இதனை கொடுத்திருந்தார்கள். ஆனால் அந்த வாக்குறுதியை அவர்கள் நிறைவேற்றவில்லை. சட்டப்படி தீர விசாரித்து யாரெல்லாம் இதில் சம்பந்தப்பட்டிருக்கிறார்களோ அவர்களை தண்டிக்க வேண்டியது தமிழக அரசு. அதை வலியுறுத்தி தான் நாங்கள் ஆர்ப்பாட்டம் செய்யவிருக்கிறோம்” என கூறினார். 

கொடநாடு கொலை மற்றும் கொள்ளை சம்பவம் நடைபெற்றபோது துணை முதலமைச்சராக நீங்களும் இருந்தீர்களே, அப்போது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த ஓ.பன்னீர்செல்வம் ”துணை முதலமைச்சருக்கு அரசில் எந்த வித அதிகாரமும் இல்லை. நான் அமைச்சராக இருந்த துறையில் மட்டும் தான் எனக்கு அதிகாரம் இருந்ததே ஒழிய சட்டம் ஒழுங்கு விஷயத்தில் எனக்கு அதிகாரம் இல்லை. சட்டம் ஒழுங்கை முழுமையாக பார்த்துக் கொண்ட பொறுப்பு யாரெல்லாம் தமிழகத்தின் முதலமைச்சராக இருந்தார்களோ அவர்களுக்கு தான் உண்டு.

திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின், கோடநாடு வழக்கைத் தீவிர புலன் விசாரணை செய்து நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்துவோம் என வாக்குறுதி தந்துள்ளார் முதல்வர். அவரது ஆட்சி அமைந்து 2 வருடங்கள் முடிந்துவிட்டது. ஆனால் சிறு அளவில் கூட முன்னேற்றம் இல்லையே. அரசின் பணியை துரிதப்படுத்தத்தான் இந்த ஆர்ப்பாட்டம்” என கூறினார்.

ஆனால், கோடநாடு கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி சயானிடம் போலீஸ் மறு விசாரணை நடத்தியதற்கு அதிமுக எதிர்ப்பு தெரிவித்தது. 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18 ஆம் தேதி இதற்காக சட்டப்பேரவையில் இருந்து எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர். அப்படி வெளிநடப்பு செய்தவர்களில் பன்னீர்செல்வம் ஒருவர். சட்டமன்றத்திற்கு வெளியே அதிமுக எம்எல்ஏகள் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிலும் பன்னீர்செல்வம் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | திடீரென வீசப்பட்ட பெட்ரோல் வெடிகுண்டு... உயர் தப்பிய திமுக எம்எல்ஏ - கடலூரில் பரபரப்பு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News