பொதுமக்களும் ஒத்துழைப்பு கொடுத்தால் மட்டுமே கொரோனாவை தடுக்க முடியும்: EPS

கொரோனா நோய் தொற்றின் தீவிரம் அறியாமல் மக்கள் விளையாட்டுத்தனமாக இருக்கிறார்கள் என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்!!

Last Updated : Apr 28, 2020, 12:16 PM IST
பொதுமக்களும் ஒத்துழைப்பு கொடுத்தால் மட்டுமே கொரோனாவை தடுக்க முடியும்: EPS  title=

கொரோனா நோய் தொற்றின் தீவிரம் அறியாமல் மக்கள் விளையாட்டுத்தனமாக இருக்கிறார்கள் என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்!!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் தொற்று நோயின் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் இதுவரை பாதிக்கபட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 1937 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை பலியானர்வாகளின் எண்ணிக்கை 24 ஆக உள்ளது. இந்நிலையில், தமிழகதில் கொரோனா தொற்று பரவுவதை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 

இதை தொடர்ந்து, தலைமைச் செயலகத்தில் கொரோனா தடுப்பு பணிக்காக அமைக்கப்பட்டுள்ள 12 IAS அதிகாரிகள் கொண்ட குழுவுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் கூறுகையில்... கொரோனா நோயின் தீவிரம் பற்றி அறியாமல் மக்கள் விளையாட்டுத்தனமாக இருக்கின்றனர். பொதுமக்களும் ஒத்துழைப்பு கொடுத்தால் மட்டுமே கொரோனா பரவலை தடுக்க முடியும்.

காய்கறி சந்தைகளில் மக்கள் தனிமனித இடைவெளியை கடைபிடிப்பதில்லை. கொரோனா குறித்து காவல்துறையும், உள்ளாட்சித்துறையும் ஒலிபெருக்கி மூலம் வீதிவீதியாக தெரிவிக்க வேண்டும். ஸ்பெயின், இத்தாலி போன்ற நாடுகளில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும். தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளின் செயல்பாடு பாராட்டத்தக்கது என அவர் தெரிவித்துள்ளார்.  

Trending News