பிரதமர் மோடியின் கலந்துரையாடல் நிகழ்ச்சி 20-ஆம் தேதிக்கு மாற்றப்பட்டு உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
பள்ளி மாணவர்கள் தேர்வுகளை எழுதும் வகையில் அவர்களை ஊக்கப்படுத்துவதற்காக பிரதமர் மோடி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் கலந்துரையாடலை நடத்தி வருகிறார். அந்தவகையில் இந்த ஆண்டும் வரும் 16-ஆம் தேதி கலந்துரையாடல் நடத்துவதற்கு திட்டமிட்டு இருந்தனர்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் மாணவர்களை தேர்வு செய்வதற்காக 9 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் சிறப்பு கட்டுரைப்போட்டி ஒன்றை நடத்தி இருந்தது. அத்துடன் இந்த கலந்துரையாடலுக்காக வருகிற 16-ந்தேதி மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு இருந்தது.
இந்நிலையில் தற்போது பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகத்தில் 16-ஆம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை என்பதால், மாணவர்களை பங்கேற்க வைப்பதிலும் சிரமம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து பிரதமர் மோடியின் கலந்துரையாடல் நிகழ்ச்சி வருகிற 20-ஆம் தேதிக்கு மாற்றப்பட்டு உள்ளது.
உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.