பொள்ளாச்சி வழக்கு: குற்றவாளிகளுக்கு உதவிய போலீஸ் சஸ்பெண்ட்

பொள்ளாச்சி வழக்கில் கைதானவர்களை உறவினரிடம் பேச அனுமதியளித்த 7 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 21, 2021, 12:08 PM IST
பொள்ளாச்சி வழக்கு: குற்றவாளிகளுக்கு உதவிய போலீஸ் சஸ்பெண்ட் title=

பொள்ளாச்சி பாலியல் வழக்கு தமிழ்நாட்டில், மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. திருநாவுக்கரசு, ரிஷ்வந்த் என்கிற சபரிராஜன், வசந்தகுமார், சதீஷ், மணிவண்ணன் ஆகிய ஐந்து பேர் ஏற்கெனவே இவ்வழக்கு தொடர்பாகக் கைதுசெய்யப்பட்டு, தற்போது இவர்கள் சேலம் மத்தியச் சிறையில் உள்ளனர். இந்தப் வழக்கை சி.பி.ஐ விசாரித்து வருகிறது. அதன்படி கடந்த 2019 ஆம் ஆண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், கோவை மகளிர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடந்து வருகிறது.

பொள்ளாச்சி (Pollachi) வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில் இருவர் நீதிமன்ற விசாரணைக்குப் பிறகு சாலையோரம் நின்ற உறவினர்களை சந்திக்க காவல்துறை அனுமதியளித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் தொடர்புடைய 9 பேரும் கோவை மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். விசாரணைக்குப் பின் 9 பேரும் சேலம் மத்திய சிறைக்கு காவல்துறையினர் கொண்டு சென்றனர். அப்பொழுது கோவை விமான நிலையம் அருகே சென்றபோது காவல் வாகனம் திடீரென நிறுத்தப்பட்டதாகவும் பாலியல் வழக்கில் (Sexually Abused) குற்றம் சாட்டப்பட்டிருந்த இருவரை அவரது உறவினர்கள் சாலையோரத்தில் நின்று ரகசியமாக சந்திக்க காவல்துறையினர் உதவியதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ALSO READ | சிகிச்சைக்கு வரும் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த டாக்டர்!

குற்றம்சாட்டப்பட்டவர்கள் உறவினர்களை சந்திக்க வேண்டுமென்றால் முறையாக நீதிமன்றத்தின் முன் அனுமதி பெற வேண்டும் என்கின்ற விதிமுறை இருக்கும் நிலையில், இப்படி ரகசியமாக சாலையில் சந்திக்க வைக்கப்பட்டது ஏன்?  அதற்கு காவல்துறை அனுமதி அளித்தது ஏன் என சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது இந்த சம்பவம். இது தொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என சேலம் காவல் ஆணையர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பான வீடியோ ஒன்றும் தற்போது வெளியாகியுள்ளது. 

இது தொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என சேலம் காவல் ஆணையர் தெரிவித்திருந்த நிலையில், பொள்ளாச்சி வழக்கில் கைதானவர்களை உறவினரிடம் பேச அனுமதியளித்த 7 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். ஆயுதப்படை சிறப்பு உதவி ஆய்வாளர் சுப்பிரமணியம், காவலர்கள் பிரபு, வேல்குமார், ராஜ்குமார், நடராஜன், ராஜேஷ்குமார், கார்த்திக் என 7 பேரையும் சஸ்பெண்ட் செய்துள்ளார் சேலம் காவல் ஆணையர் நஜ்மல்.

ALSO READ | Shocking incident: #MeToo: ரஜினியின் 2.0 நடிகை மீது பாலியல் புகார் கூறிய பிரபல மாடல்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News