2024 தேர்தலில் பிரதமர் மோடி ராமநாதபுரத்தில் போட்டி?

வட இந்தியாவில் ஏற்படும் தோல்வி பயத்தாலேயே பிரதமர் மோடி ராமநாதபுரத்தில் போட்டியிடுவார் என்றும், அவ்வாறு போட்டியிட்டால் தமிழகத்தில் படுதோல்வி அடைவார் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.  

Written by - RK Spark | Last Updated : Jul 14, 2023, 07:49 AM IST
  • மாநிலம் முழுவதும் மக்களை திரட்டி போராட்டம்.
  • பாஜக மட்டுமே இந்து மக்களின் பிரதிநிதி போல் செயல்படுவது கண்டிக்கத்தக்கது
  • செந்தில் பாலாஜி பற்றி எச். ராஜா விமர்சித்து இருப்பது கண்டிக்கத்தக்கது.
2024 தேர்தலில் பிரதமர் மோடி ராமநாதபுரத்தில் போட்டி? title=

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. பழனி மலைக்கோவிலின் பாரம்பரியத்தை பாதுகாத்திடும் வகையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசினார். முன்னதாக செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது, அரசு ஊழியர்களுக்கு மாதாந்திரமாக மதிப்பூதிய திட்டம் ஜூலை முதல் அமல்படுத்தப்படும் முதலமைச்சர் தெரிவித்து இருப்பது வரவேற்கத்தக்கது என்று தெரிவித்தார். தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சியின் செயல்பாடு ஆளுங்கட்சி போல் தோற்றத்தை ஏற்படுத்த முயற்சிப்பதாகவும், தமிழகத்தில் பாரதிய ஜனதாவின் செயல்பாடு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான பிரச்சனையை உருவாக்குவதாகவும், சிதம்பரம் கோவிலில் தீட்சிதர்கள் மட்டுமே எல்லாம் என்பது போலவும், இந்து சமய அறநிலையத்துறை கோவிலுக்குள் நுழைய கூடாது என்று சொல்வது தவறானது என்றும், குழந்தை திருமணத்திற்கு ஆதரவாக தீட்சிதர்களும், அவர்களுக்கு ஆளுநர் வக்காலத்து வாங்குவதும் ஏற்புடையது அல்ல என்றும் தெரிவித்தார். 

மேலும் படிக்க | முதல்வர் வீட்டு அருகேயே வெள்ளப்பெருக்கு... அபாய அளவை தாண்டிய யமுனை நீர்மட்டம்

தற்பொழுது பழனியில் மலைக்கோவிலுக்கு இந்து மக்கள் மட்டுமே செல்ல வேண்டும் என்று புதிய பிரச்சினையை பாஜகவினரும் இந்து அமைப்பினரும் உருவாக்கி இருப்பது தவறானது என்றும், கோவில் உள்ள சிற்பங்கள் மற்றும் கலை நயம் மிக்க கட்டிடங்களை ரசிக்கவும் அனைத்து தரப்பு மக்களுக்கும் உரிமை உண்டு என்றும், காலம்காலமாக பழனி மலைக்கோவிலுக்கு அனைத்து தரப்பு மக்களும் செல்லவேண்டும் என்றும், பாரதிய ஜனதா கட்சியும் இந்து அமைப்புகளோ ஏதேனும் பிரச்சினை செய்தால் மாநிலம் முழுவதும் மக்களை திரட்டி போராட்டம் நடத்தப்போவதாகவும் தெரிவித்தார். இந்து மதத்தை வைத்து அரசியல் செய்வது அநாகரிகமானது அநீதியானது என்றும் ஆர்எஸ்எஸ் பாஜக மட்டுமே இந்து மக்களின் பிரதிநிதி போல் செயல்படுவது கண்டிக்கத்தக்கது என்றும், ஒட்டன்சத்திரம் பகுதியில் பழனி கோவிலுக்கு சொந்தமான கோசாலை அமைந்துள்ள  இடத்தில், சிப்காட் தொழிற்சாலை அமைக்க பாஜக எதிர்ப்பு தெரிவித்து இருப்பது தவறான செயல் என்றும், தொழிற்சாலை அமைக்கப்பட்டு மக்கள் முன்னேறுவதை பாரதிய ஜனதா கட்சி தடுத்து, 22ம் நூற்றாண்டில் இருந்து மக்களை பின்னோக்கி இழுப்பதாகவும், பழைய காலம் போலவே ஆடு மற்றும் மாடுகளை மட்டுமே மக்கள் மேய்க்க வேண்டும் என பாஜக நினைப்பதாகவும் தெரிவித்தார். 

திமுக ஆட்சி அமைந்ததிலிருந்து 5000 கோடி ரூபாய் மதிப்பிலான கோவில் நிலங்கள் விற்கப்பட்டுள்ளது என்றும், அமைச்சர் செந்தில் பாலாஜி நீதிமன்ற காவலில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், அவர் பற்றி எச். ராஜா விமர்சித்து இருப்பது கண்டிக்கத்தக்கது என்றும்‌ தெரிவித்தார். வருகிற 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்தில் உள்ள ராமநாதபுரத்தில் போட்டியிடுவதாக தகவல் வருகிறது. வட இந்தியாவில் மோடிக்கு ஏற்படும் தோல்வி பயத்தாலேயே, தமிழகத்தில் போட்டியிடப் போவதாகவும், அது உண்மையாக இருக்கும் பட்சத்தில் தமிழகத்திலும் மோடி படுதோல்வி அடைவார் என்றும் பாலகிருஷ்ணன் தெரிவித்தார். பொதுக் கூட்டத்தில் மதுக்கூர் ராமலிங்கம், நகர மன்ற துணைத் தலைவர் கந்தசாமி, விடுதலை சிறுத்தைகள், திராவிடர் கழகம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க | எச்சரிக்கை! தமிழகத்தில் இந்த 7 மாவட்டங்களில் கனமழை பெய்யும்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News