Pongal 2022: பொங்கல் பரிசு தொகுப்பில் தரமற்ற பொருட்கள்! குற்றச்சாட்டும் பொதுமக்கள்

தமிழக அரசு விநியோகிக்கும் பொங்கல் பரிசு தொகுப்பில் தரமற்ற பொருட்கள் இருப்பதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு... 

Edited by - Malathi Tamilselvan | Last Updated : Jan 18, 2022, 01:57 PM IST
  • நியாயவிலை கடையில் வழங்கப்பட்ட பொங்கல் பரிசு தொகுப்பு தரம் இல்லை
  • மிளகு கொட்டைக்கு பதிலாக பருத்திக் கொட்டை
  • பொங்கல் பரிசு தொகுப்புகளை சாலையில் வீசி ஆர்ப்பாட்டம் செய்யும் மக்கள்
Pongal 2022: பொங்கல் பரிசு தொகுப்பில் தரமற்ற பொருட்கள்! குற்றச்சாட்டும் பொதுமக்கள்  title=

பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகத்தில் உள்ள அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கரும்புடன் கூடிய 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில்  பொங்கல் பரிசுத் தொகுப்புகள் வழங்கப்படுவதை நேரடியாகச் சென்று நியாயவிலைக் கடைகளில் ஆய்வு செய்ததாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அண்மையில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருந்தார்.   

அதேபோல் நியாயவிலைக் கடைகளில் பொங்கல் (Pongal 2022) பரிசுத் தொகுப்புகளை வழங்கும் பணிகளை, அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் அனைவரும் தொடர்ந்து கண்காணித்து அனைவருக்கும் தரமான பொங்கல் பரிசுப் பொருள்கள் கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி இருந்தார்.

PONGAL

இந்நிலையில் திருப்பத்தூர் கந்திலி அருகே மோட்டூர் ஊராட்சிக்குட்பட்ட நியாயவிலை கடையில் வழங்கப்பட்ட பொங்கல் பரிசு (Pongal Gift 2022) தொகுப்பு தரம் இல்லை எனக் கூறி சாலையில் வீசி எறிந்த பொதுமக்களால் பரபரப்பு ஏற்பட்டது.

மோட்டூர் ஊராட்சியில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைகளை கொண்டிருக்கும் கடை எண் c2513 ல் இன்று பொங்கல் தொகுப்பு பரிசு வழங்கப்பட்டது.

ALSO READ | பொங்கல் பரிசுப் பொருட்கள் வழங்கியதில் முறைகேடு - EPS குற்றச்சாட்டு!

இந்த தொகுப்பில் மிளகு கொட்டைக்கு பதிலாக பருத்திக் கொட்டையும், மஞ்சள் தூள் வீட்டிற்கு வெளியே போடும் கோலமாவு போல் உள்ளது எனவும் ரேஷன் அரிசியை அரைத்து ரவையாக கொடுத்திருப்பதாகவும் குற்றம்சாட்டினர்.

இதனால் தரமற்ற பொருள் வழங்கப்பட்டதால் விரக்தி அடைந்த பொதுமக்கள் பொங்கல் பரிசு தொகுப்புகளை பிரித்து சாலையில் கொட்டி வீசி ஆதங்கத்தை தெரிவித்தனர்.

pongal

இந்த நிலையில் மோட்டூர் நியாய விலை கடை முன்பு பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சில மணி நேரம் பரபரப்பு காணப்பட்டது.

ALSO READ | பொங்கல் பண்டிகைக்கான குலை மஞ்சளின் அமோக விளைச்சலால் விவசாயிகள் மகிழ்ச்சி

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News