Puducherry Assembly Election 2021 Results: தமிழகம் உட்பட நான்கு மாவட்டங்களிலும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது. இன்று காலை தொடங்கிய வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.
புதுச்சேரியில் காலை 11 மணி நிலவரப்படி என்.ஆர். காங்கிரஸ் முன்னிலையில் உள்ளது. புதுச்சேரியில் மொத்தமுள்ள 30 தொகுதிகளில் தற்போது என். ஆர்.காங்கிரஸ் 9 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.
காங்கிரஸ் கட்சி 2 தொகுதிகளில் முன்னிலை வகிக்கின்றது. பிற கட்சிகள் ஒரு தொகுதியில் முன்னிலையில் உள்ளன.
என்.டி.ஏ தலைமையிலான முன்னணியில், என். ஆர். காங்கிரஸ், அதிமுக, பாஜக ஆகிய கூட்டணிக் கட்சிகள் இடம்பெற்றுள்ளன. புதுச்சேரி, காரைக்கால், மாஹே மற்றும் ஏனாம் பகுதிகளில் மொத்தம் 30 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன.
இந்த வாக்கெடுப்பைப் பொறுத்தவரை, என்.ஆர் காங்கிரஸ் தலைவர் என் ரங்கசாமி முக்கிய பங்கு வகிக்கிறார்.
மறுபுறம், காங்கிரஸ் தலைமையிலான மதச்சார்பற்ற ஜனநாயக கூட்டணி (SDA) காங்கிரஸ், திமுக, வி.சி.க மற்றும் சிபிஐ ஆகிய கட்சிகளை உள்ளடக்கியுள்ளது.
சில மாதங்கள் முன்னர்தான், புதுச்சேரியில் பல அரசியல் நாடகங்கள் நடந்தேறின. இது பல அரசியல் கட்சிகளுக்கு கடும் கோவத்தை ஏற்படுத்தியது.
சமீபத்தில் வெளிவந்த கருத்துக்கணிப்புகள் பாஜக-வுக்கே பெரும்பான்மையை அளித்துள்ளன.
எனினும், சில கருத்துக்கணிப்புகளுக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த புதுச்சேரி முன்னாள் முதல்வர் வே. நாராயணசாமி கருத்துக்கணிப்புகள் போலியானவை என்று தெரிவித்தார்.
30,000 க்கும் மேற்பட்ட வாக்காளர்களைக் கொண்ட ஒரு தொகுதியில் வெறும் 300 பேரிடம் கருத்து கேட்கப்பட்டு இந்த ஆண்டின் தேர்தலுக்குப் பிறகான கருத்துக்கணிப்புகள் நடத்தப்பட்டதாக நாராயணசாமி தெரிவித்தார்.
இந்த ஆண்டின் தேர்தலுக்குப் பிறகான கருத்துக்கணிப்புகளை நடத்தியவர்கள் வீட்குள்ளேயே இருந்தபடி இவற்றை நடத்தியது வேடிக்கை என்று மேலும் கூறினார் அவர்.
தேர்தலுக்குப் பிறகான கருத்துக்கணிப்புகள் பெரும்பாலும் நம்பமுடியாதவையாக இருந்துள்ளன என்றே கடந்த காலங்களில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்புகளின் மூலம் நாம் புரிந்துகொள்ள முடிகிறது என்றார் வே. நாராயணசாமி.
ஏப்ரல் 6 சட்டமன்றத் தேர்தலுக்கான தனது பிரச்சாரத்தின்போது புதுச்சேரியில் மக்கள் தனக்கு அதிக அளவிலான ஆதரவைக் காட்டியதை தன்னால் உணர முடிந்தது என்றும் அவர் மேலும் நம்பிக்கை தெரிவித்தார்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR