Puducherry: புதுச்சேரி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியானது. 2021 ஆம் கல்வியாண்டில் பிளஸ் 2 படித்த மாணவர்களுக்கான தேர்வு முடிவுகளை புதுச்சேரி பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டுள்ளது.
தமிழகம் மற்றும் புதுவை (Puducherry 12th Results) மாநிலத்தில் பிளஸ் 2 மாணவர்களுக்கான மதிப்பெண் பட்டியல் இன்று காலை, 11 மணிக்கு வெளியானது. தமிழக தேர்வுத்துறை இயக்ககம் இதனை வெளியிட்டது. புதுவை மாநிலத்தில் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதி மாணவர்களுக்கான பிளஸ் 2 மதிப்பெண் பட்டியல் வெளியாகியுள்ளது. புதுச்சேரியில் உள்ள 127 பள்ளிகளிலிருந்து 12,353 மாணவர்களுக்கும், காரைக்கால் மாவட்டத்தில் 23 பள்ளிகளிலிருந்து 2,321 மாணவர்களுக்கும் என மொத்தம் 14 ஆயிரத்து 674 மாணவர்களுக்கான மதிப்பெண் பட்டியல் வெளியாகி உள்ளன.
ALSO READ | TN HSC 2021 பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: அன்பில் மகேஷ் அளித்த முக்கிய தகவல்கள்
* மதிப்பெண் பட்டியலை இணைய தளங்கள் வாயிலாக பதிவிறக்கம் செய்யலாம்
* மாணவர்களுக்கான செல்பேசியிலும் குறுந்தகவல் வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் தமிழக பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளிவந்து விட்டன. 2021 ஆம் கல்வியாண்டில் பிளஸ் 2 படித்த மாணவர்களுக்கான தேர்வு முடிவுகளை தமிழக கல்வித் துறை வெளியிட்டுள்ளது.
தேர்வு மதிபெண்களை எந்த இணையத்தில் பார்ப்பது
1. www.tnresults.nic.in
2.www.dge1.tn.nic.in
3. www.dge2.tn.nic.in
4. www.dge.tn.gov.in
மதிப்பெண் கணக்கீடு முறை
* எஸ்எஸ்எல்சி வகுப்பு மதிப்பெண்ணில் 50%, 11 ஆம் வகுப்பு மதிப்பெண் 20% மற்றும் 12 ஆம் வகுப்பு செய்முறை தேர்வு 30% எடுத்துக்கொள்ளப்படும் என கூறப்பட்டுள்ளது.
* 11 ஆம் வகுப்பில் தேர்வை எழுதாத மாணவர்களுக்கும், தோல்வியுற்ற மாணவர்களுக்கும் அந்த தேர்வுகளில் 35 மதிப்பெண்கள் வழங்கப்படும்.
* 12 ஆம் வகுப்பு தேர்வில் ஒவ்வொரு பாடத்திலும் செய்முறைத் தேர்வு 20, அக மதிப்பீடு 10 என 30% கணக்கிடப்படும்.
தமிழக 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 8,16,473 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
ALSO READ | TN HSC 2021 பிளஸ் 2 தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டன: ரிசல்ட் பார்ப்பது எப்படி
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR