TN HSC 2021 பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: அன்பில் மகேஷ் அளித்த முக்கிய தகவல்கள்

தமிழக 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 8,16,473 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 3,80,500 மாணவர்களும் 4,35,973 மாணவியரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jul 19, 2021, 11:41 AM IST
TN HSC 2021 பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: அன்பில் மகேஷ் அளித்த முக்கிய தகவல்கள்  title=

சென்னை: தமிழக பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. 2021 ஆம் கல்வியாண்டில் பிளஸ் 2 படித்த மாணவர்களுக்கான தேர்வு முடிவுகளை தமிழக பள்ளி கல்வித் துறை இன்று வெளியிட்டது. 

இதைத் தொடர்ந்து தமிழக பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி (Anbil Mahesh Poyyamozhi) அவர்கள் செய்தியாளர்களை சந்தித்தார். இன்று வெளியிடப்பட்ட பிளஸ் 2 வகுப்பு முடிவுகளைப் பற்றிய விரிவான தகவல்களை வெளியிட்டதோடு அவர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கும் பதிலளித்தார்.

பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அளித்த விவரங்களில் சில முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:

- 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 8,16,473 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்று அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.  
+2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் எண்ணிக்கை : 3,80,500
+2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவியர் எண்ணிக்கை : 4,35,973
பொதுப்பாடப்பிரிவில் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை: 7,64,593 
தொழிற்பாடப்பிரிவில் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை : 51,880
தேர்ச்சி பெற்றவர்கள் : 100%

- இன்று வெளியாகியுள்ள 2 தேர்வு முடிவுகள் மாணவர்களின் பதிவு செய்யப்பட்ட கைப்பேசிக்கு குறுஞ்செய்தி மூலம் அனுப்பி வைக்கப்படும் என்று கூறினார் அமைச்சர். 

- மாணவர்கள் ஜூலை 22ம் தேதி முதல் மதிப்பெண் சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அமைச்சர் கூறியுள்ளார்.

- இந்த ஆண்டு பிளஸ் 2 பொதுத்தேர்வில் யாரும் 600/600 மதிப்பெண் எடுக்கவில்லை. 

- தற்போது வெளியிடப்பட்டுள்ள மதிப்பெண்ணில் திருப்தி இல்லாத மாணவர்கள் தெர்வு எழுத வருகிற 22ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார். 

இன்று காலை 11 மணி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்திருந்த நிலையில், இன்று காலை பள்ளிகல்வித்துறை இன்று தேர்வு முடிவுக்ளை வெளியிட்டது. 

கடந்த மே மாதம் பிளஸ்-2 (12th Exam Results) பொதுத்தேர்வு நடைபெற இருந்தது. ஆனால் கொரோனா தொற்று அச்சம் காரணமாக பிளஸ் 2 தேர்வு ரத்து செய்யப்பட்டது. மேலும் , மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி எனவும் தமிழக அரசு (TN Govt)  அறிவித்தது.

மதிப்பெண் வழங்குவதற்கான நெறிமுறைகள் அளிக்கப்பட்டு அதன் அடிப்படையில் மதிப்பெண் தயாரிக்கும் பணிகள் நிறைவு பெற்றதால் இன்று காலை 11 மணிக்கு பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன.  

ALSO READ: TN HSC 2021 பிளஸ் 2 தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டன: ரிசல்ட் பார்ப்பது எப்படி

தேர்வு மதிபெண்களை எந்த இணையத்தில் பார்ப்பது
1. www.tnresults.nic.in 
2.www.dge1.tn.nic.in 
3. www.dge2.tn.nic.in 
4. www.dge.tn.gov.in

மாணவர்கள், பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தியாகவும் தேர்வு முடிவு அனுப்பி வைக்கப்படும்.

மதிப்பெண் கணக்கீடு முறை
* எஸ்எஸ்எல்சி வகுப்பு மதிப்பெண்ணில் 50%, 11 ஆம் வகுப்பு மதிப்பெண் 20% மற்றும் 12 ஆம் வகுப்பு செய்முறை தேர்வு 30% எடுத்துக்கொள்ளப்படும் என கூறப்பட்டுள்ளது.
* 11 ஆம் வகுப்பில் தேர்வை எழுதாத மாணவர்களுக்கும், தோல்வியுற்ற மாணவர்களுக்கும் அந்த தேர்வுகளில் 35 மதிப்பெண்கள் வழங்கப்படும். 
* 12 ஆம் வகுப்பு தேர்வில் ஒவ்வொரு பாடத்திலும் செய்முறைத் தேர்வு 20, அக மதிப்பீடு 10 என 30% கணக்கிடப்படும்.

முன்னதாக ஜூலை 31 ஆம் தேதிக்குள் பிளஸ் 2 மதிப்பெண் குறித்து விவரங்கள் வெளியிடப்படும் என கூறப்பட்டிருந்த நிலையில், தற்போது ஜூலை 19 ஆம் தேதி காலை 11 மணிக்கு பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை (TN School) அறிவித்துள்ளது.

ALSO READ | தனியார் பள்ளிகள் 75% கல்விக் கட்டணத்தை மட்டும் வசூலிக்க வேண்டும்: அரசு உத்தரவு

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News