மக்கள் நலக் கூட்டணியில் இருந்து வெளியேறியது தேமுதிக

Last Updated : Jun 22, 2016, 04:23 PM IST
மக்கள் நலக் கூட்டணியில் இருந்து வெளியேறியது தேமுதிக title=

உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிட போவதாக தே.மு.தி.க., அறிவித்துள்ளது. மக்கள் நலக் கூட்டணியில் இருந்து அதிகாரப்பூர்வமாக தேமுதிக வெளியேறிவிட்டது.

உள்ளாட்சித் தேர்தலில் தேமுதிக தனித்தே போட்டியிடும் என்று அக்கட்சியின் பொருளாளர் ஏ.ஆர். இளங்கோவன் அறிவித்துள்ளார்.

நடந்து முடிந்த தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் தி.மு.க.,வுடன் கூட்டணி அமைக்கப்படும் என கூறப்பட்ட தே.மு.தி.க., மக்கள் நலக்கூட்டணியுடன் இணைந்து போட்டியிட்டது. இதனை எதிர்த்து அக்கட்சியிலிருந்து சந்திரகுமார் உள்ளிட்ட சிலர் பிரிந்து சென்று மக்கள்-தேமுதக என்ற பெயரில் கூட்டணி அமைத்து போட்டியிட்டனர். தேமுதிக-மக்கள் நலக்கூட்டணியுடன் இணைந்து 104 தொகுதிகளில் போட்டியிட்ட அக்கட்சி அனைத்து தொகுதிகளிலும் தோல்வியடைந்தது. உளுந்தூர்ப்பேட்டையில் போட்டியிட்ட அக்கட்சி தலைவர் விஜயகாந்த் டெபாசிட் பறிபோனது. இதனையடுத்து கட்சி நிர்வாகிகளுடன் கடந்த சில நாட்களாக ஆலோசனை நடத்தி வந்தார். அதில் பெரும்பாலனோர்கள் மக்கள் நலக்கூட்டணியை விட்டு வெளியேற வேண்டும் என வலியுறுத்தினர்.

இந்நிலையில் தருமபுரியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய தேமுதிக பொருளாளர் ஏ.ஆர். இளங்கோவன், உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிட உள்ளோம். தேமுதிக தலைமையை ஏற்கும் கட்சிகள் எங்களுடன் இணைந்து போட்டியிடலாம் என்றார்.

Trending News