சென்னை: தமிழக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிரான முறைகேடு வழக்கை சிபிஐக்கு மாற்றிய சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை உச்சநீதிமன்றம் ரத்து செய்ததை அடுத்து, அதுக்குறித்து திமுக அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி விளக்கம் அளித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், சிபிஐதான் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுக்கவில்லை, நியாயமான விசாரணை நடைபெற வேண்டும் என்பதே திமுகவின் கோரிக்கை என ஆர்.எஸ்.பாரதி விளக்கம் அளித்துள்ளார். அதேநேரத்தில் உயர்நீதிமன்றத்தில் நியாயமான விசாரணை நடைபெற்று நல்ல தீர்ப்பு வரும் என்ற நம்பிக்கை உள்ளது எனவும் ஆர்.எஸ்.பாரதி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த திமுக அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, திமுக சார்பில் 2018 ஆம் ஆண்டு முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிச்சாமி நிர்வாகத்தில் பல்வேறு ஊழல்கள் நடைபெற்றது. நெடுஞ்சாலைத்துறையில் 4800 கோடி ஊழல் நடைபெற்றதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக சார்பில் வழக்கு தொடர்ந்தோம். அரசு பொறுப்பில் உள்ளவர்கள் அவருடைய உறவினர்களுக்கு வழங்க கூடாது என்ற விதி உள்ளது. ஆனால் எடப்பாடி பழனிச்சாமியின் 2 உறவினர்களுக்கு டெண்டர் வழங்கப்பட்டுள்ளது. சிபிஐ விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. உச்சநீதிமன்றத்தில் இன்று சிபிஐ விசாரணைக்கு தடை பெறப்பட்டுள்ளது.
தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பது தான் எங்கள் கோரிக்கை என்றும் உச்சநீதிமன்றத்தில் எங்கள் வாதம் ஏற்கப்பட்டுள்ளது. திமுக யார் மீதும் பொய் வழக்கு போடுவதில்லை, நியாயமாக வழக்கு நடத்தி வெல்வோம் என தெரிவித்த அவர், நாங்கள் கேட்பது உண்மையான விசாரணை மட்டுமே. சிபிஐ தான் விசாரிக்க வேண்டும் என்று நாங்கள் சொல்லவில்லை என்றார்.
மேலும் படிக்க: மக்கள் தினமும் துடிக்கிறார்கள் - எடப்பாடி பழனிசாமி ஆதங்கம்
தற்போது எடப்பாடி பழனிச்சாமி வழக்கு வந்துள்ளது. அடுத்து வேலுமணி வழக்கு வரவுள்ளது என்றும் ஒன்றன்பின் ஒன்றாக நீங்கள் பார்ப்பீர்கள் என்றும் சிறை செல்ல வேண்டியவர்கள் செல்வார்கள். அடுத்தது கொடநாடு போன்ற வழக்குகள் உள்ளது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு நான் எந்த வழக்கையும் தொடுக்கவில்லை. இந்த வழக்கு திமுக எதிர்கட்சியாக இருந்தபோது தொடர்ந்தது.
சென்னை உயர்நீதிமன்றத்திலேயே வழக்கை நடத்தலாம் என உச்சநீதிமன்றம் தெரிவித்திருக்கிறது என்றும் நியாயமான விசாரணை நடைபெற்று நல்ல தீர்ப்பு வரும் என்ற நம்பிக்கை உள்ளது. திமுக மீது புகார் தெரிவிப்பவர்களுக்கு சாவல் விடுகிறேன், முடிந்தால் நீதிமன்றத்தில் வழக்கு தொடருங்கள். பாஸ்போர்ட் வழக்கில் அண்ணாமலையை பாரட்டிய அதே நீதிபதி டேவிட்சன் தேவாசிர்வாதம் மீது தவறு இல்லை எனக் கூறியுள்ளது என்பதையும் மேற்கோள்காட்டினார்.
மேலும் படிக்க: இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமிக்கு கிடைத்த ‘புரட்சி’ பட்டம்
அ.தி.மு.க. ஆட்சியில் நெடுஞ்சாலைப் பணிகள் மேற்கொள்ள ஒதுக்கப்பட்ட டெண்டர் ஒப்பந்தத்தில், 4,800 கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாக அப்போதைய கட்சியான திமுக குற்றம் சாட்டியது. அதனைத்தொடர்ந்து கடந்த 2018 ஆம் ஆண்டு முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக திமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதாவது திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், சி.பி.ஐ. 2018ல் விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது. இந்த வழக்கு விசாரணைக்கு பட்டியலிடப்படாமல் கடந்த 4 ஆண்டுகளாக நிலுவையில் இருந்தது. இதனிடையே, இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரிக்க தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை கோரிக்கை விடுத்துள்ளது.
இதை ஏற்று 4 ஆண்டுகளுக்குப் பிறகு ஜூலை 26 ஆம் தேதி வழக்கு விசாரணை செய்யப்பட்டு ஆகஸ்ட் 3ஆம் தேதிக்கு (இன்று) ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
(செய்தியாளர்: Jaffer Mohaideen Mohamed Ismail)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ