சென்னையை அடுத்த கிழக்கு தாம்பரத்தில் உள்ள சென்னை கிருத்துவக் கல்லூரியில் முதுநிலை இதழியல் துறை சார்பில் பிக்சலத்தான் (Pixelthon) தேசிய அளவிலான புகைப்பட கண்காட்சி நடைபெற்றது.
இந்த கண்காட்சியில் கொரோனா நோய் தொற்றின் போது முதுநிலை தமிழக புகைப்பட பத்திரிகையாளர்களால் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இடம்பெற்றன.
இந்த புகைப்பட கண்காட்சியை தமிழக சுகாதார செயலர் ராதாகிருஷ்ணன் ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதார செயளர் ராதாகிருஷ்ணன்,
"தற்போது வரை இலவசமாக தடுப்பூசி வழங்கியும் 44 லட்சம் பேர் முதல் தவனை செலுத்தவில்லை, அதே போல் 1.25 கோடி பேர் இதுவரை இரண்டாம் தவனை தடுப்பூசி செலுத்தபடவில்லை.
மேலும் படிக்க | UPI Tips: யுபிஐ மூலம் ஏடிஎம்-லிருந்து பணம் எடுக்கலாம், கார்ட் கூட தேவையில்லை
இதில் முக்கியமாக 11.68 லட்சம் 60 வயதிற்க்கு மேல் முன்கள பணியாளர்கள் மற்றும் சுகாதாரதுறை பணியாளர்கள் பூஸ்டர் டோஸ் செலுத்தபடாமல் உள்ளதால் அனைவரும் உடனடியாக முன் வந்து தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும்.
மத்திய அரசு தனியார் மருத்துவமனையில் பூஸ்டர் தடுப்பூசிகள் செலுத்தி கொள்ளலாம் என்று பொதுமக்களிடம் வலியுறுத்தினாலும் பொதுமக்களுக்கு இலவசமாக செலுத்தகூடிய தடுப்பூசிகளே வெற்றிகரமாக செயல்பட்டு கொண்டிருக்கிறது.
அதனை இலவசமாக வழங்க மத்திய அரசை வலியுறுத்தியுள்ளோம், மழை மற்றும் வெயில் போன்ற பருவ காலங்களில் ஏற்படும் நோய்களை கட்டுபடுத்த சுகாதார துறை முழுமையாக தயாராக உள்ளது"
என்று தெரிவித்தார்.
மேலும் படிக்க | அமேசானில் நம்ப முடியாத தள்ளுபடி: ரூ. 23,000 விவோ போன் வெறும் ரூ.2,899க்கு கிடைக்கும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR