தமிழகத்தின் பல மாவட்டங்களில் அதிகாலை முதல் மழை!!

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலை முதல் மழை பெய்து வருகிறது.

Updated: Dec 14, 2019, 08:48 AM IST
தமிழகத்தின் பல மாவட்டங்களில் அதிகாலை முதல் மழை!!

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலை முதல் மழை பெய்து வருகிறது.

தென்மேற்கு வங்கக்கடலில் நிலவிவரும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. அதன்படி இன்று காலை முதல் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது.

தஞ்சாவூர், வல்லம், நாஞ்சிக்கோட்டை, சூரக்கோட்டை உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருகிறது. திருச்சியில் பல இடங்களில் மழை பெய்து வருகிறது. மேலும் புதுக்கோட்டையில் மிதமான மழை பெய்து வருகிறது. கரூர், அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம், லாலாபேட்டை மற்றும் குளித்தலை உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருகிறது.

சென்னையில் கோயம்பேடு, வடபழனி, கத்திப்பாரா, விமான நிலையம், அனகாபுத்தூர், பல்லாவரம், ஈக்காட்டுத்தாங்கல் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது.