தமிழகத்தைச் சேர்ந்த இரண்டு ஆசிரியர்களுக்கு தேசிய விருது!!

சென்னையில் அசோக் நகரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியரான ஆர் சி சரஸ்வதி, மற்றும் விழுப்புரம் மாவட்டம் சத்தியமங்கலத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த ஆங்கில ஆசிரியர் எஸ்.திலீப் ஆகியோர் 2020 தேசிய விருதுகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 22, 2020, 12:36 PM IST
  • மத்திய கல்வி அமைச்சகம் தேசிய விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 47 ஆசிரியர்களின் பட்டியலை வெள்ளிக்கிழமை வெளியிட்டது.
  • மாநிலத்திலிருந்து பரிந்துரைக்கப்பட்ட 6 ஆசிரியர்களில் இருவர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
  • COVID-19 நெருக்கடி காரணமாக, ஆசிரியர்கள் இந்த ஆண்டு வீடியோ கான்பரன்சிங் மூலம் விளக்கக்காட்சியை வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர்.
தமிழகத்தைச் சேர்ந்த இரண்டு ஆசிரியர்களுக்கு தேசிய விருது!!  title=

சென்னை: சென்னையில் அசோக் நகரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியரான ஆர் சி சரஸ்வதி (RC Saraswathi), மற்றும் விழுப்புரம் மாவட்டம் சத்தியமங்கலத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த ஆங்கில ஆசிரியர் எஸ்.திலீப் (S Dhilip) ஆகியோர் 2020 தேசிய விருதுகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

மத்திய கல்வி அமைச்சகம் (Union Ministry Of Education) தேசிய விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 47 ஆசிரியர்களின் பட்டியலை வெள்ளிக்கிழமை வெளியிட்டது. பள்ளி கல்வித் துறை, மூன்று தலைமை ஆசிரியர்கள் மற்றும் மூன்று ஆசிரியர்கள் என மொத்தம் ஆறு ஆசிரியர்களின் பெயர்களை மாநிலத்திலிருந்து தேசிய விருதுக்கு (National Award) பரிந்துரைத்திருந்தது. அவர்களில் இருவர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

COVID-19 நெருக்கடி காரணமாக, ஆசிரியர்கள் இந்த ஆண்டு வீடியோ கான்பரன்சிங் மூலம் விளக்கக்காட்சியை வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர்.

நகரில் மிகப்பெரிய பெண்கள் பள்ளிகளில் ஒன்றை தலைமை ஏற்று நடத்திக்கொண்டிருக்கும் ஆர் சி சரஸ்வதி, இந்த விருது பள்ளியில் பணிபுரியும் 121 ஆசிரியர்களுக்கும் ஒரு அங்கீகாரம் என்றார்.

"எங்கள் துறை மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் உதவியுடன், எங்கள் மாணவர்களுக்கு ஸ்மார்ட் வகுப்புகள் மற்றும் அறிவியல் ஆய்வகங்கள் உட்பட சிறந்த உள்கட்டமைப்பை வழங்க முடிகிறது," என்று அவர் கூறினார்.

கடந்த ஆண்டு இந்த பள்ளியில் மொத்த சேர்க்கை 3,945 ஆக இருந்தது. இந்த பள்ளி, ஏழை பின்னணியைச் சேர்ந்த மாணவர்களுக்கு ஆங்கில மற்றும் தமிழ் வழிக் கல்வியை வழங்குவதால் இந்த பள்ளியில் இடம் கிடைப்பது கடினமான ஒரு விஷயமாகவே இருந்து வருகிறது.

"நான் பொறுப்பேற்பதற்கு முன்பே எங்கள் பள்ளி பிரபலமான பள்ளியாக இருந்தது. நான் அதை மேலும் மேம்படுத்தினேன்," என்று அவர் மேலும் கூறினார்.

2014 ஆம் ஆண்டில் தலைமை ஆசிரியராக பொறுப்பேற்பதற்கு முன்பு 20 ஆண்டுகளுக்கும் மேலாக முதுகலை வேதியியல் ஆசிரியராக சரஸ்வதி பணியாற்றினார்.

தேசிய விருதைப் பெற்ற மற்றொரு ஆசிரியர் எஸ். திலிப். ஆங்கிலத்தில் பட்டதாரி ஆசிரியரான எஸ்.திலீப், கிராமப்புற குழந்தைகளின் ஆங்கில வாசிப்பு மற்றும் எழுதும் திறனை மேம்படுத்துவதில் செய்த பங்களிப்பிற்காக இந்த விருதைப் பெற்றார்.

ALSO READ: பள்ளிகள் திறக்கும் வரை மாணவர்களுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்படும்

"கிராமப்புற குழந்தைகளுக்கான வாசிப்பு திறனை மேம்படுத்துவதற்கான ஒலிப்பு முறையை (Phonetics Method) நாங்கள் உருவாக்கியுள்ளோம். இது ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்களை எட்டியுள்ளது. விளையாட்டுகளின் மூலம் இலக்கணத்தைக் கற்பிக்கும் பணித்திட்டத்தையும் நான் செயல்படுத்தினேன். இந்த ப்ராஜெக்டிற்காக எனக்கு NCERT-யின் இனவேஷன் விருது கிடைத்தது.”என்று கூறினார்.

ஆசிரியர்களுக்கு ஆங்கிலம் மற்றும் ICT (தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்பம்) பயிற்சி அளிப்பதிலும் அவர் ஈடுபட்டுள்ளார். விருது பெற்ற ஆசிரியர்கள் செப்டம்பர் 5 ஆம் தேதி குடியரசுத் தலைவரிடமிருந்து விருதுகளைப் பெறுவார்கள். 

ALSO READ: புத்தகம் அச்சடிக்கும் பணி தாமதம்; அடுத்த மாதம் தான் புத்தகம் கிடைக்கும்: கல்வி அமைச்சர்

Trending News