தமிழகத்திற்கு இன்று "ரெட் அலர்ட்"... நாளை "ஆரஞ்சு அலர்ட்"...

தமிழகத்தில் அதிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால், ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது!

Last Updated : Dec 1, 2019, 06:32 PM IST
தமிழகத்திற்கு இன்று "ரெட் அலர்ட்"... நாளை "ஆரஞ்சு அலர்ட்"...

தமிழகத்தில் அதிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால், ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது!

தமிழகத்தில் இன்று அதிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால், ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை மிக கனமழை பெய்யும் என்பதால் ஆரெஞ்ச் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதன் இடையே, சென்னையில், வில்லிவாக்கம், பெரம்பூர், அடையாறு, மந்தைவெளி, திநகர், நங்கநல்லூர், மீனம்பாக்கம், பல்லாவரம், கோயம்பேடு, அண்ணா நகர் பகுதிகளிலும், திருவள்ளூர் மாவட்டத்தில் மீஞ்சூர், மணலி, கொளத்தூர், பாடி, மாதவரம் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

இது தொடர்பாக இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்; தமிழகத்திற்கு இன்று ரெட் அலர்ட் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல், நாளை ஆரஞ்சு அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு நிர்வாக ரீதியாக அதிகாரிகளுக்கு விடுக்கப்பட்டுள்ளதால், மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் இந்த ரெட் அலர்ட் என்பது தமிழகம் முழுவதற்கும் பொருந்ததாது. இது ஒரு சில மாவட்டங்களில், குறிப்பிட்ட இடங்களில் அதிகனமழை பெய்யும் என்பதற்காக கூறப்பட்டுள்ளது. 

சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு அதிக கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சூறாவளிக் காற்றுவீசும் என்பதால் குமரி, லட்சத்தீவு கடல் பகுதிக்கு 2 நாட்களுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

 

More Stories

Trending News