மிக்ஜாம் புயல்: 4 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்..! மீட்பு படைகள் தயார் நிலையில்

மிக்ஜாம் புயல் கரையை நோக்கி வேகமாக நகர்ந்து வரும் நிலையில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.   

Written by - S.Karthikeyan | Last Updated : Dec 3, 2023, 05:06 PM IST
  • மிக்சாங் புயல் 4 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்
  • மிக அதிக கனமழை பெய்யும் என அறிவிப்பு
  • மீட்புபடையினர் உள்ளிட்டோர் தயார் நிலையில்
மிக்ஜாம் புயல்: 4 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்..! மீட்பு படைகள் தயார் நிலையில் title=

மிக்ஜாம் புயல் நெருங்குவதையொட்டி சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலெர்ட் கொடுத்துள்ளது. காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு இந்த எச்சரிக்கை கொடுக்கப்பட்டிருக்கும் நிலையில் ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என தெரிவித்துள்ளது. இதனால் அப்பகுதியில் இருக்கும் மக்கள் மகுந்த எச்சரிக்கையோடு இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க | “மிக்ஜாம் புயல்” நா ரெடி தான் வரவா.. மக்களே வெளியே செல்லாதீர்கள்! செல்பி வேண்டாம்

மிக்ஜாம் புயல் நெருங்கும்போது காற்றின் வேகமும், மழையின் வேகமும் அதிகரிக்கும். இப்போதைய கணிப்பின்படி 70 கிமீ வேகத்தில் தரைக்காற்று வீசும் என கூறப்படுகிறது. இதனால் தாழ்வான மற்றும் பாதுகாப்பற்ற பகுதிகளில் இருக்கும் மக்கள் அரசின் நிவாரண முகாம்களுக்கு அல்லது பாதுகாப்பான இடங்களுக்கு செல்வது சிறந்தது. அரசு சார்பில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளது. அமைச்சர்கள் கே.என்.நேரு, கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, மா சுப்பிரமணியன் மற்றும் சேகர்பாபு உள்ளிட்ட அமைச்சர்கள் மாவட்ட வாரியாக களப்பணியாற்றிக் கொண்டிருக்கின்றனர். 

மிக்ஜாம் புயல் வட தமிழகத்தில் இருக்கும் கடலோர மாவட்டங்களில் அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என யூக்கிப்பட்டுள்ளது. வர்தா மற்றும் கஜா புயல் பாதிப்புகள் போல் அல்லாமல் அதிக மழைப்பொழிவு கொடுக்கும் புயலாக இருக்கும் என வானிலை ஆய்வு மைய நிபுணர்கள் தெரிவித்திருக்கின்றனர். அதேநேரத்தில் அதிக மழைப்பொழிவும் ஆபத்தை ஏற்படுத்த வாய்ப்பு இருக்கிறது.

காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் இருக்கும் ஏரி, குளங்கள் வேகமாக நிரம்பிக் கொண்டிருக்கின்றனர். ஏற்கனவே நிரம்பிய ஏரிகளில் இருந்து உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது. சென்னையைப் பொறுத்தவரையில் செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பி உபரி நீர் 1500 கன அடி நீர் திறக்கப்பட்டு வந்தது. இப்போது 3000 கன அடியாக உபரி நீர் திறப்பு அதிகரித்திருக்கிறது. மாலை முதல் கனமழை அதிகரிக்கும் என்பதால் ஏரியின் கொள்ளவுகளை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். வானிலை ஆய்வு மையத்தின் தகவல்படி, இன்று மாலை படிப்படியாக அதிகரிக்கும் மழையின் அளவு நாளை மாலை வரை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதீத கனமழை பெய்யும் இந்த நேரத்தில் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் வெளியே வரவேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். என சென்னை பெருநகர  வளர்ச்சிக் கழகம் தெரிவித்துள்ளது. 

மேலும் படிக்க | மிக்ஜாம் புயல்: குளமாகும் காஞ்சிபுரம் - 24 மணி நேரத்தில் கொட்டிய 211 மிமீ மழை..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News