கடந்த மாதம் 16-ம் தேதி காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பான வழக்குகளை விசாரித்த வந்த உச்ச நீதிமன்றம், காவேரியில் இருந்து தமிழகத்துக்கு 177.25 டி.எம்.சி தண்ணீரை திறந்து விட வேண்டும் என்றும், 6 வார காலத்திற்குள்ளாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டு என மத்திய அரசுக்கு ஆணையிட்டது.
ஆனால் கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆகும் நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் மத்திய அரசு மெத்தனம் காட்டி வருகிறது. மேலும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முடியாது. அதற்கு பதிலாக ஒரு திட்ட குழு அமைப்பு உருவாக்க வேண்டும் என மத்திய அரசு கூறி வருகிறது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி தமிழக எம்.பி-க்கள் தொடர்ந்து பாராளுமன்றத்தில் வலியுறுத்தி வருகின்றனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் காலதாமதம் செய்யும் மத்திய அரசை கண்டித்து தமிழகத்தில் அனைத்து கட்சிகளும் கண்டனம் தெரிவித்து\ வருகின்றனர்.
இந்நிலையில், இன்று காலை 2018-19 ஆம் நிதியாண்டின் பட்ஜெடை தமிழக சட்டப்பேரவையில் துணை முதல்வர் மற்றும் நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் தாக்கல் செய்தார். அப்பொழுது திமுக சட்டமன்ற உறுப்பினா்கள் வெளிநடப்பு செய்தனர்.
2018-19 ஆம் நிதியாண்டிக்கன பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து, கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் அவை தள்ளிவைக்கப்பட்டது. மீண்டும் சுமார் 3.30 மணிக்கு அவை கூடியது.
அவை தொடங்கியதும் வெளிநடப்பு செய்த திமுக சட்டமன்ற உறுப்பினா்கள் கறுப்பு சட்டை அணிந்து கலந்து கொண்டனா். சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டத்தில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும் என ஒருமனதாக தீர்மானம் இயற்றப்பட்டது.
Resolution urging Centre to constitute #CauveryManagementBoard and #CauveryWaterMonitoringCommittee passed unanimously in #TamilNadu Assembly. pic.twitter.com/2CRWzRIYlv
— ANI (@ANI) March 15, 2018