ஆர்கேநகர் இடைத்தேர்தல்: தீபா வேட்பு மனுத்தாக்கல் தள்ளி வைப்பு?

Last Updated : Mar 22, 2017, 12:06 PM IST
ஆர்கேநகர் இடைத்தேர்தல்: தீபா வேட்பு மனுத்தாக்கல் தள்ளி வைப்பு? title=

ஆர்கேநகர் இடைத்தேர்தலில் போட்டியிடவுள்ள தீபா வேட்புமனுத் தாக்கலை நாளைக்கு ஒத்தி வைத்துள்ளார். 

கடந்த டிசம்பர் 5-ம் தேதி தமிழகத்தின் முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதா மரணம் அடைந்தார். இதையடுத்து ஆர்கேநகர் தொகுதி காலியாக இருந்தது.

கடந்த 3 மாதமாக காலியாக இருந்த இந்த தொகுதிக்கு அடுத்த மாதம் 12-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதற்கான வேட்புமனுத்தாக்கல் நாளையுடன் முடிவு அடையும் நிலையில் அனைத்து கட்சிகளும் வேட்பாளர் தேர்வில் தீவிரம் காட்டி வருகின்றன. 

இதையடுத்து எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை என்ற அமைப்பை தொடங்கிய தீபா, ஆர்கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்தார். இன்று ஆர்கே.நகரில் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளதாகவும் அறிவித்திருந்தார். 

இந்நிலையில் தனது வேட்பு மனுத்தாக்கலை தீபா திடீரென நாளைக்கு ஒத்திவைத்துள்ளார். அவரது பேரவையை சேர்ந்த நிர்வாகிகள் பலரும் ஓபிஎஸ் அணிக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் நாளை காலை 10 மணிக்கு எம்.ஜி.ஆர். சமாதிக்கு செல்லும் தீபா வேட்பு மனுவை எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா சமாதியில் வைத்து வணங்கிவிட்டு தீபா ஆர்கேநகரில் வேட்புமனுவை தாக்கல் செய்கிறார்.

Trending News