ஆர்கேநகரின் இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று வெளியீடு

Last Updated : Mar 27, 2017, 09:23 AM IST
ஆர்கேநகரின் இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று வெளியீடு title=

ஆர்கேநகர் இடைத்தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட உள்ளது. இன்று மாலை 3 மணி வரை வேட்புமனுக்களை திரும்ப பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த தேர்தலில் அதிமுக உடைந்து 3 பிரிவுகளாக போட்டியிடுகிறது. திமுக, பாஜக, தேமுதிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, சமத்துவ மக்கள் கட்சி, நாம் தமிழர் கட்சி ஆகியவை வேட்பாளர்களை நிறுத்தி உள்ளது.

தேர்தலில் போட்டியிட அதிமுக அம்மா சார்பில் தினகரன், அதிமுக புரட்சி தலைவி அம்மா அணி சார்பில் மதுசூதனன், திமுக சார்பில் மருத கணேஷ், பாஜக சார்பில் கங்கை அமரன், தேமுதிக சார்பில் மதிவாணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் லோகநாதன், ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா, உள்ளிட்டோர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். 

ஆர்கேநகர் தொகுதிக்கு ஏப்ரல் 12-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

தற்போது 82 பேரின் வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. வேட்பு மனுக்களை வாபஸ் பெற்றுக் கொள்ள இன்று கடைசி நாள் ஆகும். பிற்பகல் 3 மணிக்குள், மனுக்களை வாபஸ் பெற்றுக் கொள்ளலாம் என தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. இதையடுத்து மாலை 5 மணிக்கு, இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.

Trending News