மத்திய அரசின் ஆண்டுதோறும் சிறந்த இலக்கியப் படைப்புகளுக்கு சாகித்ய அகாடமி சார்பில் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நடப்பு ஆண்டுக்கான(2017) சாகித்ய அகாடமி விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன. அதில் தமிழ்நாட்டை சேர்ந்த மறைந்த கவிஞர் இன்குலாப் மற்றும் யூமா வாசுகிக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
‘காந்தள் நாட்கள்’ என்ற கவிதை தொகுப்பிற்காகவும் மறைந்த கவிஞர் இன்குலாப்புக்கும், மலையாளத்தில் ஓ.வி.விஜயன் எழுதிய ‘கசாக்கிண்ட இதிகாசம்’ எனும் நூலை, ‘கசாக்கின் இதிகாசம்’ எனத் தமிழில் மொழிபெயர்த்த யூமா வாசுகிக்கும் இந்த விருதுகள் வழங்கப்பட்டன.