வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி: விதிகளில் மாற்றம், மசோதா நிறைவேற்றப்பட்டது

Banking Laws (Amendment) Bill, 2024: மக்களவையில், செவ்வாயன்று வங்கிச் சட்டங்கள் (திருத்தம்) மசோதா, 2024 நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்கள் இனி நான்கு நாமினிகள் வரை தங்கள் கணக்குகளில் வைத்திருக்க அனுமதிக்கப்படுவார்கள்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Dec 4, 2024, 11:18 AM IST
  • மக்களவையில், செவ்வாயன்று வங்கிச் சட்டங்கள் (திருத்தம்) மசோதா, 2024 நிறைவேற்றப்பட்டது.
  • மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் அங்கீகரிக்கப்பட்டது.
  • கூட்டுறவு வங்கிகளில் இயக்குநர்களின் பதவிக்காலத்தில் மாற்றம்.
வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி: விதிகளில் மாற்றம், மசோதா நிறைவேற்றப்பட்டது title=

Banking Laws (Amendment) Bill, 2024: இன்றைய உலகில் கிட்டத்தட்ட அனைவரிடமும் வங்கிக்கணக்கு உள்ளது. வங்கி கணக்குகள் வைத்திருக்கும் அனைவரும் அதற்கான விதிகள் பற்றி முழுமையாக அறிந்திருக்க வேண்டியது மிக அவசியமாகும். குறிப்பாக, எத்தனை வகையான கணக்குகள் உள்ளன, இவற்றில் ஏற்படும் புதுப்பிப்புகள் என்ன? இதனால் வாடிக்கையாளர்களுக்கு ஏற்படும் விளைவுகள் என்ன? இப்படி அனைத்து விதமான தகவல்களும் வங்கி வாடிக்கையாளர்களிடம் இருப்பது அவசியம். வங்கிக் கணக்குகள் தொடர்பாக சமீபத்தில் வந்துள்ள ஒரு புதுப்பிப்பை பற்றி இங்கே காணலாம்.

மக்களவையில், செவ்வாயன்று வங்கிச் சட்டங்கள் (திருத்தம்) மசோதா, 2024 நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்கள் இனி நான்கு நாமினிகள் வரை தங்கள் கணக்குகளில் வைத்திருக்க அனுமதிக்கப்படுவார்கள். 

மற்றொரு முன்மொழியப்பட்ட மாற்றம் இயக்குனர் பதவிகளுக்கான விருப்பங்களுக்கான மறுவரையறையுடன் தொடர்புடையது. இது தற்போதைய வரம்பான ரூ.5 லட்சத்திற்குப் பதிலாக ரூ.2 கோடியாக அதிகரிக்கலாம். இந்த வரம்பு கிட்டத்தட்ட ஆறு தசாப்தங்களுக்கு முன்னர் நிர்ணயிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் அங்கீகரிக்கப்பட்டது

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் (Nirmala Sitharaman) முன்மொழிந்த மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் அங்கீகரிக்கப்பட்டது. மசோதா மீதான விவாதத்திற்கு பதிலளித்த சீதாராமன், டெபாசிட் செய்பவர்களுக்கு அடுத்தடுத்து அல்லது ஒரே நேரத்தில் நாமினிகளை பரிந்துரை செய்யும் வசதி இருக்கும் என்றும், லாக்கர் வைத்திருப்பவர்களுக்கு அடுத்தடுத்த நாமினி பரிந்துரைகள் மட்டுமே இருக்கும் என்றும் கூறினார்.

வங்கிகளின் செயல்திறன்

2014 முதல், அரசும், இந்திய ரிசர்வ் வங்கியும் (Reserve Bank of India) மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பதால், வங்கிகள் எந்த வித எற்ற இறக்கங்களயும் காணாமல் நிலையாக இருக்கும் என்றும் அவர் கூறினார். "நமது வங்கிகளை பாதுகாப்பாகவும், நிலையானதாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருப்பதே நோக்கமாகும். மேலும் 10 ஆண்டுகளுக்குப் பிறகு எமது திட்டமிடலின் பயனை நாம் இப்போது பார்க்கிறோம்" என்று நிதி அமைச்சர் தெரிவித்தார்.

மேலும் படிக்க | மத்திய அரசு ஊழியர்களுக்கு புத்தாண்டு பரிசு: 18 மாத அரியர் தொகை.... பட்ஜெட்டில் அறிவிப்பா?

கூட்டுறவு வங்கிகளில் இயக்குநர்களின் பதவிக்காலத்தில் மாற்றம்

அரசியலமைப்பு (தொண்ணூற்று-ஏழாவது திருத்தம்) சட்டம், 2011 உடன் இணங்கும் வகையில், கூட்டுறவு வங்கிகளில் இயக்குநர்களின் (தலைவர் மற்றும் முழு நேர இயக்குநர் தவிர்த்து) பதவிக்காலத்தை 8 ஆண்டுகளில் இருந்து 10 ஆண்டுகளாக அதிகரிக்க மசோதா முன்மொழிகிறது.

இந்த மசோதா நிறைவேற்றப்பட்டதும், மத்திய கூட்டுறவு வங்கியின் இயக்குனர்கள் மாநில கூட்டுறவு வங்கியின் குழுவில் பணியாற்ற அனுமதி கிடைக்கும். சட்டப்பூர்வ தணிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தை முடிவு செய்வதில் வங்கிகளுக்கு அதிக சுதந்திரம் அளிக்கவும் இந்த மசோதா முயல்கிறது. வங்கிகளின் ஒழுங்குமுறை இணக்கத்திற்கான அறிக்கையிடல் தேதிகளை மறுவரையறை செய்யவும் மசோதா முயல்கிறது. இரண்டாவது மற்றும் நான்காவது வெள்ளிக்கிழமைகளுக்குப் பதிலாக ஒவ்வொரு மாதமும் 15 ஆம் தேதி மற்றும் கடைசி நாளுக்கு மாற்ற திட்டம் உள்ளது.

வங்கித் துறையில் மேம்பட்ட நிர்வாகம்

மசோதாவின் பரிசீலனை மற்றும் நிறைவேற்றலுக்கு அதை அளித்த நிதி அமைச்சர், முன்மொழியப்பட்ட திருத்தங்கள் வங்கித் துறையில் நிர்வாகத்தை வலுப்படுத்தும் என்றும் முதலீட்டாளர்களின் பரிந்துரை மற்றும் பாதுகாப்பு தொடர்பாக வாடிக்கையாளர் வசதியை மேம்படுத்தும் என்றும் தெரிவித்தார்.

மேலும் படிக்க | EPFO 3.0: PF பணத்தை எளிதாகப் பெற மத்திய அரசு முயற்சியில் EPFO கார்டு விரைவில் அறிமுகம்!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News