சந்தன கடத்தல்காரன் வீரப்பனின் மகள் வித்யா ராணி சனிக்கிழமை பாஜகவில் இணைந்தார்!!
கிருஷ்ணகிரி: இறந்த சந்தன கடத்தல்காரன் வீரப்பனின் மகள் வித்யா ராணி சனிக்கிழமை தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரியில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் பாஜகவுடன் இணைந்தார். இந்நிகழ்ச்சியில் கட்சியின் பொதுச் செயலாளர் முரளிதர் ராவ், முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
"ஏழைகளுக்கும், தாழ்த்தப்பட்டோருக்கும் அவர்களின் சாதி, மத வேறுபாடின்றி நான் பணியாற்ற விரும்புகிறேன். பிரதமர் நரேந்திர மோடியின் திட்டங்கள் மக்களுக்கானவை, அவற்றை மக்களிடம் கொண்டு செல்ல விரும்புகிறேன்" என்று வித்யா ராணி கூறினார்.
சந்தன கடத்தல் வீரப்பனின் மூத்த மகள் வித்யாராணி. வழக்குரைஞருக்கு படித்துள்ள இவர் காதல் திருமணம் செய்து கொண்டார். சென்னை வியாசர்பாடியில் கணவருடன் வசித்து வரும் வித்யாராணி நேற்று கிருஷ்ணகிரியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பா.ஜனதா தேசிய பொதுச் செயலாளர் முரளிதரராவ், முன்னாள் மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில் பா.ஜனதாவில் இணைந்தார்.
இதையடுத்து, மக்கள் மத்தியில் அவர் பேசுகையில்... "எனது தந்தை வீரப்பன் அடித்தட்டு மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று அடிக்கடி கூறுவார். ஆனால் அவர் தவறான பாதைக்கு சென்றுவிட்டார். நான் நேர்மையான வழியில் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பா.ஜனதாவில் இணைந்துள்ளேன். பிரதமர் மோடியின் திட்டங்கள் அனைத்தும் மக்களை கவர்ந்துள்ளன. அவரது திட்டங்களால் கவரப்பட்ட நானும் பா.ஜனதாவில் இணைந்துள்ளேன்" என அவர் கூறினார்.