சசிகலா கணவர் நடராஜன் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில், அதிமுகவின் சட்டமன்ற குழு தலைவராக சசிகலா ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 

Updated: Feb 6, 2017, 11:55 AM IST
சசிகலா கணவர் நடராஜன் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி
Zee Media Bureau

சென்னை: சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில், அதிமுகவின் சட்டமன்ற குழு தலைவராக சசிகலா ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 

அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், சட்டமன்ற குழு தலைவருமான சசிகலாவின் கணவர் ம.நடராஜனுக்கு நேற்று மாலை திடீர் உடல் நலக் குறைவு ஏற்பட்டது. உடல் சோர்வு மற்றும் அசதி காரணமாக அவரை சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு டாக்டர்கள் எக்ஸ்ரே, ஸ்கேன், இ.சி.ஜி. எடுத்து பரிசோதித்து ஆரம்பகட்ட சிகிச்சை அளித்தனர். மருத்துவமனையில் தங்கி சிகிச்சை மேற்கொள்ள அவரை டாக்டர்கள் அறிவுறுத்தினார்கள். 

டாக்டர்கள் அவருக்கு தொடர் சிகிச்சை அளித்து வருகின்றனர். இன்னும் சில தினங்கள் தங்கி இருந்து அவர் சிகிச்சை பெறுவார் என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.