தனியார் பள்ளி கட்டிடம் இடிந்து விபத்து

Last Updated : Apr 13, 2017, 05:08 PM IST
தனியார் பள்ளி கட்டிடம் இடிந்து விபத்து title=

காட்பாடி அருகே கோரந்தாங்கலில் புதிதாக கட்டப்பட்டு வரும் பள்ளிக்கடம் இடிந்ததில் 20க்கும் மேற்பட்டோர் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 5 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வேலூர் மாவட்டத்தில் உள்ள கோரந்தாங்கலில் தனியார் நிறுவனம் பள்ளிக் கட்டிடம் கட்டி வருகிறது. இன்று கட்டிடம் கட்டும்போது திடீரென கட்டிடம் இடிந்து விழுந்தது. இந்த இடிபாடுகளில் சுமார் 20 பேர் சிக்கியிருப்பதாக கூறப்படுகிறது. 

தற்போது துரிதகதியில் மீட்புப் பணி நடந்து வருகிறது. கட்டிடம் இடிந்து விழுந்ததற்கான காரணம் உடனடியாக தெரிய வரவில்லை.

Trending News