மாணவர்கள் ஆன்லைன் கேமுக்கு அடிமையாவதை தடுக்க வேண்டும் - பள்ளிக்கல்வித்துறை

மாணவர்களின் ஆரோக்கியமான எதிர்காலத்திற்கு சவாலாக முளைத்துள்ள ஆன்லைன் விளையாட்டுக்களில் இருந்து பள்ளி மாணவர்களை காப்பதற்கான வழிகாட்டுதல்களை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 25, 2021, 12:09 PM IST
மாணவர்கள் ஆன்லைன் கேமுக்கு அடிமையாவதை தடுக்க வேண்டும் - பள்ளிக்கல்வித்துறை title=

தொழில்நுட்பம் என்பது மனித குலத்திற்கு ஒரு பெரிய வரமாக அமைந்துள்ளது. நமது பல பணிகளை தொழில்நுட்பம் எளிதாக்கியுள்ளது. எனினும், இதில் பல எதிர்மறை விளைவுகளும் உள்ளன என்பதை மறுப்பதறில்லை.

மாணவர்களின் ஆரோக்கியமான எதிர்காலத்திற்கு சவாலாக முளைத்துள்ள ஆன்லைன் விளையாட்டுக்களில் இருந்து பள்ளி மாணவர்களை காப்பதற்கான வழிகாட்டுதல்களை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டது. 

No description available.

வழிகாட்டுதல்களில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:

இது தொழில்நுட்பத்தின் யுகம். இந்த யுகத்தில் குழந்தைகளிடையே ஆன்லை கேமிங் என்பது மிகவும் பிரபலமாக உள்ளது. பல விறுவிறுப்பான தருணங்களும், பல சவால்களும் நிறைந்துள்ளதால், இது குழந்தைகளிடையே அதிக வரவேற்பை பெற்றுள்ளதோடு மட்டுமல்லாமல், அவர்கள் இதற்கு அடிமையாகும் நிலையும் ஏற்பட்டுள்ளது.

ஆன்லைன் விளையாட்டுகளை (Online Gaming) இணையத்தின் மூலமோ, அல்லது பிற கணினி இணைப்புகள் மூலமோ விளையாட முடியும். கணினிகள், மடிக்கணினிகள், கன்சோல்கள், மொபைல் போன்கள் என பல கேமிங் தளங்களில் குழந்தைகள் இந்த விளையாட்டுகளை விளையாட முடியும். ஆன்லைன் கேம்களுக்கான அணுகல்  குழந்தைகளுக்கு எந்த தடையும் இல்லாமல் கிடைத்து விடுகின்றது. கொரோனா தொற்று துவங்கியதிலிருந்து, குழந்தைகள் பெரும்பாலும் வீட்டிலேயே இருப்பதால், கடந்த இரண்டு ஆண்டுகளில் குழந்தைகள் ஆன்லைன் கேமிங்கில் காட்டும் ஈடுபாடு பன்மடங்கு அதிகமாகிவிட்டது.

ஆனால், இந்த ஆன்லைன் கேமிங் பல எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து ஆன்லைன் கேமிங்கில் ஈடுபட்டு விளையாடுவதால், குழந்தைகள் அவற்றுக்கு முழுமையான அடிமையாகி மன உளைச்சலுக்கும் அழுத்தத்துக்கும் ஆளாகிறார்கள். ஒவ்வொரு லெவலும் முந்தைய கட்டத்தை விட அதிக சவால் நிறைந்ததாக இருப்பதால், குழந்தைகளுக்கு தேவை இல்லாத குழப்பமும், அழுத்தமும் ஏற்பட்டு ‘கேமிங் டிஸ் ஆர்டர்’ ஏற்படுவதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். 

No description available.

இவற்றைக் கருத்தில் கொண்டு, ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கான ஒரு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. ஆன்லைன் கேமிங்கில் இருக்கும் எதிர்மறை விளைவுகளை கவனத்தில் கொண்டு, இதன் முறையான பயன்பாட்டை உறுதி செய்து, தேவையான இடங்களில் தேவையான நடவடிக்கைகளை எடுக்க இதில் அறிவுறுத்தப்படுள்ளது.

ALSO READ: Online Rummy: விராட் கோலி, நடிகை தமன்னாவிற்கு கேரளா HC நோட்டீஸ்

பெற்றோர், ஆசிரியர்களுக்கான அறிவுறுத்தலில் வலியுறுத்தப்பட்டுள்ள சில முக்கிய அம்சங்கள் இதோ:

செய்யக்கூடாதவை:

- பெற்றோரின் அனுமதி இன்றி எந்த வித விளையாட்டையும் வாங்க குழந்தைகள் அனுமதிக்கப்படக் கூடாது. ஆர்.பி.ஐ (RBI) வழிகாட்டுதலின் படி, ஓ.டி.பி அடிப்படையிலான கட்டண முறையில் பணம் செலுத்தப்பட வேண்டும்.

- விளையாட்டுகளுக்கு செலவிடப்படும் தொகைக்கு ஒரு வரம்பை வைப்பது நல்லது.

- குழந்தைகள் லாப்டாப் அல்லது மொபைல் போன்கள் மூலம் தாங்களாக கேம்களை வாங்க அனுமதிக்காதீர்கள்.

- தெரியாத வலைத்தளங்களிலிருந்து எந்த வித இணைப்பையும் பதிவிறக்கம் செய்ய வேண்டாம் என குழந்தைகளை எச்சரிக்கவும்.

- எந்த இணைப்பிலும், தங்களது சொந்த விவரங்களை பகிர வேண்டாம் என குழந்தைகளுக்கு அறிவுறுத்தவும்.

- பெற்றோர்கள் தங்களின் டெபிட் / கிரெடிட் கார்டுகள், OTP-ஐ பிள்ளைகள் பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது.

- செயலிகள், இணையதளம் மூலம் அறிமுகமாகும் நபர்களிடம் எந்தவித தகவல் பரிமாற்றமும் செய்யக்கூடாது என குழந்தைகளுக்கு எச்சரிக்க வேண்டும்.

செய்ய வேண்டியவை:

- இணையதளத்திலோ, செயலியிலோ ஏதேனும் விபரீதமாக நிகழ்ந்துவிட்டால் உடனடியாக ஸ்க்ரீன்ஷாட் எடுத்து அதை ரிப்போர்ட் செய்ய வேண்டும்.

- மாணவர்கள் எந்த செயலிகளை பயன்படுத்துக்றார்கள், எந்த கேம்களை அதிக நேரம் விளையாடுகிறரகள் என்பதை பெற்றோர் கண்காணிக்க வேண்டும்.

- உங்கள் குழந்தை விளையாடும் கேம்களின் வயது வரம்பை செக் செய்யவும்.

- மாணவர்கள் அடல்டு தளங்கள் / செயலிகளை பயன்படுத்துகிறார்களா என்பதைக் கண்காணித்து அதை தடுத்து, அவர்களுக்கு தேவையான கவுன்சிலிங்கை வழங்க வேண்டும்.

- ஆன்லைன் விளையாட்டுகள் ஒரு பொழுதுபோக்குதான் என்பதை புரிய வைத்து, படிப்பில் கவனம் செலுத்த அவர்களுக்கு பெற்றோர் அறிவுறை வழங்க வேண்டும்.

- திடீரென மதிப்பெண்கள் குறைந்தாலோ, படிப்பில் கனவம் குறைந்தாலோ, பழகும் விதத்தில் மாற்றம் ஏற்பட்டாலோ, ஆசிரியர்கள் உடனே அதற்கான காரணத்தைக் கண்டறிந்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.   

No description available.

 

ALSO READ: தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொள்ளுங்கள்; அதை கட்டுப்படுத்த வேண்டாம்: மோடி

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News