சென்னை: பொதுவாக ‘ஃப்ரோஷ்’ (Frosch) மற்றும் ‘லம்போர்கினி’ (Lamborghini) என அழைக்கப்படும் எக்ஸ்டஸி (Ecstasy) மாத்திரைகளின் புதிய வகைகள் சென்னையில் உள்ள வெளிநாட்டு தபால் நிலையத்தில் சுங்க அதிகாரிகளால் (Customs Officials) கைப்பற்றப்பட்டுள்ளன. சமீபத்திய வாரங்களில் வெளிநாட்டு தபால் வழியாக சென்னையில் எக்ஸ்டஸி மாத்திரைகள் (Ecstasy pills) அனுப்ப பல முறைகேடான முயற்சிகள் நடந்துள்ளன.
இதில் போதைப்பொருள் (Drugs) பொருட்கள் இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில், சென்னை (Chennai) ஏர் சுங்க அதிகாரிகள் நெதர்லாந்தில் (Netherlands) இருந்து வந்ததாக சந்தேகிக்கப்படும் இரண்டு அஞ்சல் பொட்டலங்களை தடுத்து வைத்திருந்தது.
READ MORE | $800 மில்லியனுக்கும் அதிக மதிப்புள்ள போதைப்பொருட்களை அழித்த மியான்மர்
அந்த பொட்டலங்களை பரிசோதனை செய்த போது, முதல் பார்சலில் 490 பச்சை நிற மாத்திரைகள். இது ஒரு போதைப் பொருள் என்று சந்தேகிக்கப்படுகிறது. இந்த மாத்திரைகள் பொதுவாக ‘ஃப்ரோஷ்’ என்று அழைக்கப்படுகின்றன. அவை 160 மி.கி எம்.டி.எம்.ஏ. (MDMA) அளவாக இருக்கிறது.
இரண்டாவது பார்சலில் சூப்பர் கார் பிராண்டிற்கு ஒத்த ஒரு காளை லோகோவுடன் பொறிக்கப்பட்ட 50 ஆரஞ்சு மாத்திரைகள் இருப்பது கண்டறியப்பட்டது. இந்த மாத்திரைகள் "லம்போர்கினி" என்று அழைக்கப்படுகின்றன மற்றும் சுமார் 200 மி.கி எம்.டி.எம்.ஏ. அளவு உள்ளது. கைப்பற்றப்பட்ட மாத்திரைகளில் எம்.டி.எம்.ஏ மிக அதிக அளவைக் கொண்டிருப்பதால் அவை மிகவும் சக்திவாய்ந்தவை. 120 மி.கி. அளவுக்கு அதிகமாக இருப்பதாகவும், அது ஆபத்தானது என்றும் கருதப்படுகிறது.
READ MORE | பெண்களுக்கு ஆபத்தான இடம், அவர்களது சொந்த வீடு தான்...
ரூ .16 லட்சம் மதிப்புள்ள மொத்தம் 540 எம்.டி.எம்.ஏ மாத்திரைகள் என்.டி.பி.எஸ் சட்டம், 1985 இன் கீழ் மீட்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன.
சென்னை (Chennai) நகரத்தில் வசிக்கும் இரண்டு வெவ்வேறு நபர்களுக்கு பார்சல்கள் அனுப்பப்பட்டன. அதனை பின்தொடர்ந்து சென்ற அதிகாரிகள் முகவரியை சோதனை செய்தனர் மற்றும் இந்த கடத்தலில் பங்கு இருக்கலாம் என சந்தேகத்தின் பேரில் இரண்டு நபர்களை அதிகாரிகள் [பிடித்து வைத்துள்ளனர்.