Senthil Balaji Hospitalized: சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையினரால் கடந்த ஜூன் மாதம் கைது செய்யப்பட்டார். அப்போது, செந்தில் பாலாஜிக்கு ஏற்பட்ட நெஞ்சுவலியின் காரணமாகச் சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதயத்தில் 4 அடைப்புகள் இருப்பதால் அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.
உயர் நீதிமன்ற அனுமதியோடு சென்னை காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அங்கு அவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அமைச்சர் செந்தில் பாலாஜி உடல்நிலையில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து காவேரி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு, கடந்த ஜூலை மாதம் முதல் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
மேலும் படிக்க | ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவிக்கு பாலியல் சீண்டல்!
தொடர்ந்து நீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் மறுக்கப்பட்டு வரும் நிலையில், நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்த சூழலில், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இன்று திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. சிறை மருத்துவமனையில் மருத்துவர்கள் பரிசோதித்த நிலையில் உடனடியாக காவல்துறை ஆம்புலன்ஸ் மூலமாக பலத்த பாதுகாப்புடன் அமைச்சர் செந்தில் பாலாஜி ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
செந்தில் பாலாஜிக்கு ஸ்டான்லி மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை மேற்கொண்ட நிலையில், தீவிர நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் கூடுதல் வசதிகள் நிறைந்த ஓமந்தூர் அரசு மருத்துவமனைக்கு போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து வந்தனர். ஸ்டான்லி மருத்துவமனையில் எக்கோ, எக்ஸ்ரே எடுக்கபட்ட நிலையில் மேல் சிகிச்சைக்காக ஓமந்தூரார் மருத்துவமனையில் செந்தில் பலாஜி அனுமதிக்கப்பட்டார்.
செந்தில் பாலாஜிக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றமும், சென்னை உயர் நீதிமன்றமும் அவருக்கு ஜாமீன் அளிக்க மறுத்த நிலையில், உச்ச நீதிமன்றத்தில் தற்போது அவர் ஜாமீன் மனுவை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவை வரும் அக். 30ஆம் தேதிக்குள் விசாரிக்க உத்தரவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் மனு மீதான விசாரணையில், செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் தொடர்ந்து தலைமறைவாக உள்ள நிலையில், ஜாமீன் வழங்கினால் சாட்சிகளை கலைக்க வாய்ப்புள்ளதாகவும் அமலாக்கத்துறை சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
அமலாக்கத்துறையின் வாதங்களை ஏற்றுக் கொண்ட நீதிபதி ஜெயச்சந்திரன், மருத்துவ காரணங்களுக்காக ஜாமீன் கொடுக்க முடியாது எனவும், அமைச்சரின் சகோதரர் தலைமறைவாக இருப்பதாலும் ஜாமீன் வழங்க முடியாது என்றும் கூறி, அவரது மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இந்த நிலையில், திமுக அமைச்சரவையில் இலாக்கா இல்லா அமைச்சராக தொடரும் செந்தில் பாலாஜியின் பதவி என்னவாகும் என்றும் செந்தில் பாலாஜி தரப்பில் அடுத்த கட்ட நகர்வு என்னவாக இருக்கும் என்ற கேள்வியும் எழுந்தது குறிப்பிடத்க்கது.
மேலும் படிக்க | பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வம் ஜாமீன் கேட்டு மனு தாக்கல்.!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ