PSBB ஆசிரியர் ராஜகோபாலன் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது

சென்னை பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Jun 25, 2021, 06:58 PM IST
PSBB ஆசிரியர் ராஜகோபாலன் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது title=

சென்னை: சென்னையில் உள்ள பத்மா சேஷாத்ரி பள்ளி (PSBB) ஆசிரியர் ராஜகோபாலன் மீது பாலியல் தொல்லை புகார்கள் பதிவானது. அவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டிருந்தார். தற்போது அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.  

ஐந்து மாணவிகள் அளித்த புகாரை அடிப்படையாகக் கொண்டு காவல்துறையினர் ராஜகோபாலிடம் விசாரணை நடத்தினர். ஆசிரியர் ராஜகோபாலனிடம் (Rajagopalan) நடத்தும் அனைத்து விசாரணையும் வீடியோ பதிவு செய்யப்படுகின்றது. விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்துள்ளன.

இதுவரை ராஜகோபாலன் அளித்துள்ள வாக்குமூலங்களின் அடிப்படையில், ராஜகோபாலன் செய்துள்ள பலவித தகாத செயல்கள், மாணவிகளுக்கு அளித்துள்ள தொந்தரவுகள் ஆகியவற்றின் அடிப்படையில் பல குற்றப்பத்திரிக்கைகளை தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ALSO READ: PSBB பள்ளி முதல்வரிடம் மீண்டும் விசாரணை: நடவடிக்கை எடுக்காதது குறித்து காவல்துறை கேள்வி

தற்போது அவர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கு செல்லும் மாணவிகளின் மன உளைச்சலுக்கு காரணமான ராஜகோபாலனுக்கு அதிகப்படியான தண்டனையை பெற்றுதர போலீசார் (TN Police) நடவடிக்கை எடுத்து வருவதாக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ராஜகோபாலனை விசாரணை செய்த விவரங்கள் வெளிவந்தால் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவரக்கூடும் என காவல்துறை வட்டார்ங்கள் தெரிவிக்கின்றன. பெரும்பாலான குற்றங்களுக்கு ஆசிரியர் ராஜகோபாலன் ஒப்புக்கொண்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. 

ALSO READ: பாலியல் புகார்: மகரிஷி வித்யா மந்திர் பள்ளி ஆசிரியர் பணியிடை நீக்கம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News