சென்னை: ஆசிரியர்கள் மீதான பாலியல் புகார்கள் தமிழகத்தில் தொடர் கதையாகி வருகிறது. இந்த பட்டியலில் சமீபத்தில் சேர்ந்திருப்பது சென்னை ஷெனாய் நகரில் உள்ள புனித ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் பள்ளி.
பாலியல் தொல்லை தந்ததாக இந்த பள்ளியின் ஆசிரியர் மீது வந்த புகாரை அடுத்து தமிழக பள்ளிக்கல்வித்துறை அந்த பள்ளிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
முன்னதாக சென்னையில் உள்ள பி.எஸ்.பி.பி (PSBB) மற்றும் மகரிஷி வித்யா மந்திர் ஆகிய பள்ளி ஆசிரியர்கள் மீது பாலியல் புகார்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் வந்ததையடுத்து, இரண்டு ஆசிரியர்களையும் அந்தந்த பள்ளிகள் பணியிடை நீக்கம் செய்தன. பி.எஸ்.பி.பி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மகரிஷி வித்யா மந்திர் ஆசிரியர் தொடர்பான விசாரணை நடந்து வருகிறது.
இதற்கிடையில், தடகள விளையாட்டு வீராங்கனைகளிடம் பயிற்சியின் போது தகாத முறையில் நடந்துகொண்டதாகவும், பாலியல் தொல்லை (Sexual Harassment) கொடுத்ததாகவும் குற்றச்சாட்டுகள் பெறப்பட்டு சென்னை பாரிமுனையில் உள்ள ஒரு தனியார் தடகள விளையாட்டு அகாடமியின் பயிற்சியாளர் நாகராஜன் மீது போக்சோ உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் பூக்கடை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ALSO READ: பாலியல் புகார்: மகரிஷி வித்யா மந்திர் பள்ளி ஆசிரியர் பணியிடை நீக்கம்
இன்று இதன் தொடர்ச்சியாக சென்னையின் (Chennai) மற்றொரு பள்ளி ஆசிரியர் பற்றி இப்படிப்பட்ட ஒரு புதிய குற்றச்சாட்டு வந்துள்ளது. சென்னை ஷெனாய் நகரில் உள்ள புனித ஜார்ஜ் ஆங்கிலேய இந்தியன் மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றும் ஒரு ஆசிரியர் மீது அந்த பள்ளியில் படித்த முன்னாள் மாணவிகள் பாலியல் குற்றச்சாட்டுகளை அளித்துள்ளனர். இது குறித்த தீவிர விசாரணை மேற்கொள்ளும் பொருட்டு அந்த ஆசிரியர் மற்றும் அப்பள்ளியின் தாளாளர் தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், ஒவ்வொன்றாக இப்படிப்பட்ட குற்றச்சாட்டுகள் வெளிவந்துகொண்டிருப்பது மிகுந்த வேதனையை அளித்து வருகிறது. நாள் முழுவதும் மாணவர்கள் இருப்பது பள்ளியில்தான். பெற்றோருக்கு சமமாக மாணவர்களின் வாழ்க்கையில், அக்கறையும் அன்பும் காட்டுபவர்கள் ஆசிரியர்கள். இன்றும் ஆசிரியர்கள் அனைவரும் அப்படித்தான் உள்ளார்கள் என்பதில் சந்தேகமில்லை. ஒரு சிலர் செய்யும் தகாத செயல்களால் ஆசிரியர்கள் அல்லது பள்ளிகளின் மகத்தான சேவைகளை கண்டிப்பாக தள்ளி வைத்துவிட முசியாது.
எனினும், தற்போது தொடர்ந்து அடுத்தடுத்த நாட்கள் இப்படிப்பட்ட குற்றசாட்டுகள் வருவதால், ஒருவரைப் பார்த்து மற்றவருக்கு குரல் எழுப்ப துணிவு வருகிறதென்பதை புரிந்துகொள்ள முடிகிறது. இது போன்ற சம்பவங்கள் வெளியே வரவேண்டும் என்பதும், சம்பந்தபட்ட நபர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.
ALSO READ: PSBB பள்ளி முதல்வரிடம் மீண்டும் விசாரணை: நடவடிக்கை எடுக்காதது குறித்து காவல்துறை கேள்வி
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR