Vijayakanth Health Update: தேமுதிக தலைவரும், தமிழ் சினிமாவின் பிரபல நடிகருமான விஜயகாந்த் கடந்த நவ. 18ஆம் தேதி சென்னையில் மியாட் மருத்துவமனையில் சளி, இருமல், தொண்டை வலி போன்ற உடல்நிலை பிரச்னைகள் காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்தார். தொடர்ந்து அவருக்கு அங்கு சிகிச்சை வழங்கப்பட்டு வந்த நிலையில், மியாட் மருத்துவமனை விஜயகாந்த் உடல்நிலை குறித்து அறிக்கை ஒன்றை இன்று (நவ. 29) வெளியிட்டுள்ளது.
அதில்,"விஜயகாந்தின் உடல்நலத்தில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டது. எனினும் கடந்த 24 மணி நேரத்தில் அவரது உடல்நிலை சீரான நிலையில் இல்லாததால், அவருக்கு நுரையீரல் சிகிச்சைக்கான உதவி தேவைப்படுகிறது. அவர் விரைவில் பூரண உடல்நலம் பெறுவார் என்று நம்புகிறோம். அவருக்கு இன்னும் 14 நாட்கள் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை தேவைப்படுகிறது" என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இந்த அறிக்கையை மியாட் மருத்துவமனையின் நிர்வாக இயக்குநரான மருத்துவர். பிரித்வி மோகன்தாஸ் வெளியிட்டுள்ளார்.
#NewsUpdate | விஜயகாந்த் உடல்நிலை சீராக இல்லை - மியாட் மருத்துவமனை#ZeeTamilNews | #Vijayakanth | #DMDK
Android Link: https://t.co/9DM6X6Ze8y
Apple Link: https://t.co/3ESH9sGYnv pic.twitter.com/cC46T5Wljv— Zee Tamil News (@ZeeTamilNews) November 29, 2023
வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி
முன்னதாக, சளி, இருமல், காய்ச்சல் போன்ற உடல்நலக் குறைப்பாட்டால் அனுமதிக்கப்பட்டிருந்த விஜயகாந்த் உடல்நிலை குறித்து பல்வேறு வதந்திகள் பரவிய நிலையில், அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், கடந்த நவ. 23ஆம் தேதி மியாட் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில் அவர் இன்னும் ஓரிரு நாள்களில் வீடு திரும்புவார் என்றும் அதுவரை மருத்துவக்குழுவின் கண்காணிப்பில் இருப்பார் எனவும் குறிப்பிட்டிருந்தது.
மேலும் நவ. 23ஆம் தேதி வெளியிட்ட அந்த அறிக்கையில், காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விஜயகாந்தின் உடல்நிலை நன்றாக இருப்பதாகவும், சிகிச்சைக்கு அவர் நன்றாக ஒத்துழைப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. மருத்துகள் அனைத்தையும் அவர் உடல்நிலை ஏற்று கொள்வதாகவும் தெரிவிக்கப்பட்டது. குறிப்பாக, விஜயகாந்த் சுயநினைவோடு இருப்பதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டது.
விஜயகாந்தின் உடல்நிலை குறித்து எவ்வித பொய் தகவல்களும், ஊகங்களும் பரவக்கூடாது என்பதற்கா மியாட் மருத்துவமனை அவரது உடல்நிலை குறித்து வெளிப்படைத்தன்மையுடன் இருப்பதை இன்றைய அறிக்கை உறுதிசெய்திருப்பதாக சமூக வலைதளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
விஜயகாந்தின் உடல்நிலை கடந்த சில ஆண்டுகளுக்காவே முன்பு போல இல்லை என்ற தகவல்கள் தொடர்ந்து வெளி வந்தன. மேலும், அவரும் வெளியே வருவதை பெரிய அளவில் குறைத்துக்கொண்டார் எனலாம். கடந்த ஆக.25ஆம் தேதி அவரது பிறந்தநாளுக்கு, கோயம்பேடு பகுதியில் உள்ள தேமுதிக அலுவலகத்திற்கு அவர் வருகை தந்தது அவர்களின் தொண்டர்களுக்கு பெரும் ஊக்கத்தை அளித்தது.
மேலும் படிக்க | ஆதித்யா விண்கலத்தின் பணிகள் ஜனவரியில் தொடங்கும் - மயில்சாமி அண்ணாதுரை
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ