சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயில் வாரம் மூன்று முறை இயங்கும்!!

சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயில் இன்று முதல் வாரத்திற்கு மூன்று முறை இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

Last Updated : Feb 25, 2019, 05:22 PM IST
சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயில் வாரம் மூன்று முறை இயங்கும்!! title=

சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயில் இன்று முதல் வாரத்திற்கு மூன்று முறை இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

சென்னை எழும்பூரிலிருந்து செங்கோட்டை மார்க்கமாக வாரத்தில் புதன், சனிக்கிழமைகளிலும், மறுமார்க்கமாக செங்கோட்டையில் இருந்து எழும்பூருக்கு வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்பட்டு வந்தது. இந்த ரயிலை வாரத்தின் அனைத்து நாட்களிலும் இயக்க வேண்டும் என்று தென்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். 

இந்நிலையில், தற்போது உள்ள இரண்டு நாட்களுடன் கூடுதலாக ஒரு நாள் இயக்கப்படும் என்று கூறி தென்னக ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு  இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது.

Trending News