அரசுப் பேருந்துகளின் பராமரிப்பு நிலைகள் குறித்து மாவட்டந்தோறும் பல்வேறு வரவேற்புகளும், புகார்களும் இருந்த வண்ணம் உள்ளன. ஆனாலும் தமிழக மக்களின் பயணச் சேவைக்காக தொடர்ந்து அரசுப் பேருந்துகள் இயங்கப்பட்டு வருகின்றன. ஓர் அரசுப் பேருந்தில் அமரும் இடம் சரியில்லை, சீட் கிழிந்திருக்கிறது, ஜன்னல் சாற்ற முடியவில்லை, ஏறும் படிக்கட்டு தூக்கலாக இருக்கிறது, கைப்பிடி இல்லை போன்ற குறைகளைக் கூட பொறுத்துக் கொள்ளலாம். மழைக் கொட்டிக் கொண்டிருக்கும் போது பேருந்துக்குள்ளேயே மழை பெய்தால் என்னதான் செய்வது.!
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனைகளில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு அரசு பேருந்துகள் நாள்தோறும் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் பல பேருந்துகள் பழுதாகியும், சேதமடைந்தும் இருப்பதாக பயணிகள் தொடர்ந்து புகார் அளித்து வருகின்றனர். முக்கிய நகரப் பகுதிகளுக்குச் செல்லும் பேருந்துகளுக்கு மட்டும் பராமரிப்பு செய்வதாகவும், கிராமங்களுக்குச் செல்லும் பேருந்துகள் பராமரிப்பின்றிக் கிடப்பதாகவும் பயணிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
பல பேருந்துகளில் மேற்கூறைகள் முற்றிலும் சிதைந்து காணப்படுவதாகவும் அவர்கள் குறைகூறுகின்றனர். இதனால் கொளுத்தும் வெயிலில் பயணம் செய்யும் பொதுமக்கள் மீது ஓட்டை வழியாக வெயில் தொந்தரவு செய்யும் நிலையும் இருந்து வருகிறது.
இந்நிலையில், புதுக்கோட்டையில் இருந்து அன்னவாசல் இலுப்பூர் வழியாக திண்டுக்கல்லுக்கு 50க்கும் மேற்பட்ட பயணிகளுடன் அரசுப் பேருந்து புறப்பட்டுச் சென்றது. அப்போது, அன்னவாசல் இலுப்பூர் பகுதிகளில் கனமழை பெய்துகொண்டிருந்தது. அந்த வழியாக பேருந்து சென்றுகொண்டிருந்த போது, திடீரென மழைத்தண்ணீர் பேருந்துக்குள் கொட்டியது. பேருந்தின் மேற்கூரை ஆங்காங்கே ஓட்டையாகிக் கிடப்பதால் அதன் வழியாக மழைத்தண்ணீர் உள்ளே வந்தது.
இதனால் பயணிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். குடை வைத்திருந்தவர்கள் மழையில் இருந்து தப்பிக்க, குடைப்பிடித்தபடி பேருந்தில் பயணத் செய்தனர். இந்த அவல நிலையை அங்கிருந்த பயணி ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவைக் குறிப்பிட்டு பயணிகள் சிலர், போக்குவரத்துத் துறை அமைச்சருக்கு கேள்விகளை எழுப்பியுள்ளனர்.
மேலும் படிக்க | பெண்களுக்கு சலுகை: அரசு விரைவுப் பேருந்துகளில் தனிப் படுக்கை ஒதுக்கீடு
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR