சென்னையிலிருந்து தங்கள் சொந்த ஊர்களுக்குச் சென்று தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக தமிழக அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்திருந்தது. அந்த வகையில் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் புறநகர் பகுதியான பெருங்களத்தூர், தாம்பரம் சேலையூர் பல்லாவரம் பகுதியை சுற்றியுள்ள மக்கள், வண்டலூர் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டது.
தீபாவளி (Diwali) சிறப்புப் பேருந்கள் இயக்கத்தினை போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தாம்பரம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையம் (MEPZ) மற்றும் தாம்பரம் இரயில் நிலைய பேருந்து நிறுத்தம் ஆகிய இடங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். சில பயணிகள் பேருந்துகள் குறித்து புகார்கள் தெரிவித்தையடுத்து வெளியூர் செல்லும் பேருந்துகளை ஆய்வு மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுரித்தியத்தின் பேரில் சென்னை தெற்கு சரக இணை போக்குவரத்து ஆணையர் ஜெய்சங்கரன், தாம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலர் சுதாகர் மற்றும் மோட்டார் போக்குவரத்து ஆய்வாளர் தேவநேசரி ஆகியோர் வண்டலூர் கிளாம்பாக்கத்தில் உள்ள பேருந்து நிலையத்தில் தனியார் ஆம்னி வாகனத்தில் ஏறி வாகண தணிக்கையில் ஈடுபட்டனர்.குறிப்பாக ஆம்னி பேருந்தில் பயணம் செய்யும் பயனிகளிடம் சென்று கட்டணம் அதிகமாக வசூலிக்கப்பட்டதா, பாதுகாப்பான பயணம் குறித்து கேட்டறிந்தனர்.
ALSO READ | தீபாவளிக்குள் ரூ.50,000-ஐ தொடுமா தங்கத்தின் விலை? இப்போது வாங்கினால் லாபம் காணலாமா?
மேலும் வாகனத்தை ஓட்டும் ஓட்டுனரிடம் டிரைவிங் லைசென்ஸ் மற்றும் வாகனத்தின் ஆவணங்கள் சரியாக உள்ளதா என சோதித்தனர். அதுமட்டுமில்லாமல் வண்டியில் முதலுதவி அளிப்பதற்கு மருத்துவ உபகரணங்கள் இருக்கிறதா, அவசரத்திற்கு வெளியேறுவதற்காக அவசர வழி இயங்குகிறதா, பயணிகள் பாதுகாப்பாக செல்கிறார்கள் என பரிசோதித்தனர். முறையாக ஆவணங்கள் இல்லாத ஆம்னி பேருந்துகளுக்கு அபராதம் விதித்தனர்.
அதேபோல் சோழிங்கநல்லூர் வட்டார போக்குவரத்து அலுவலர் யுவராஜ், செங்கல்பட்டு மோட்டர் வாகன ஆய்வாளர்கள் விஜயா,முரளி,ஆனந்த் ஆகியோர் செங்கல்பட்டு சுங்க சாவடியில் வாகன தணிக்கை ஈடுபட்டனர்.மாலை 6 மணிக்கு தொடங்கிய வாகன சோதனை கொட்டும் மழையிலும் தொடர்ந்து நள்ளிரவு வரை நடைபெற்றது.
ALSO READ | Diwali 2021: ஆஸ்துமாவை பரப்பும் பட்டாசுகளை இந்தியாவுக்கு அனுப்புகிறதா சீனா?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR