‘நான் தற்கொலை செய்துகொள்ளப் போகிறேன்' உதவி ஆய்வாளர் வெளியிட்ட ஆடியோவால் பரபரப்பு

நான் தற்கொலை செய்துகொள்ளப் போகிறேன், என்னை வீட்டு விடுங்கள் என பேசி உதவி ஆய்வாளர் வெளியிட்ட ஆடியோவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

Written by - JAFFER MOHAIDEEN | Edited by - Sripriya Sambathkumar | Last Updated : Dec 29, 2021, 02:20 PM IST
  • உதவி ஆய்வாளர் பேசிய ஆடியோவால் பரபரப்பு.
  • உதவி ஆய்வாளர் பேசியுள்ள ஆடியோ தீயென பரவி வருகிறது.
  • நான் தற்கொலை செய்துகொள்ளப் போகிறேன் - உதவி ஆய்வாளர்.
‘நான் தற்கொலை செய்துகொள்ளப் போகிறேன்' உதவி ஆய்வாளர் வெளியிட்ட ஆடியோவால் பரபரப்பு title=

“நான் மிகுந்த மன உளைச்சலில் இருக்கேன். நான் தற்கொலை செய்துக்க போறேன். என்ன விட்டுவிடுங்க அய்யா"  என உதவி ஆய்வாளர் பேசிய ஆடியோவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தொகுதிக்குட்பட்ட வேப்பங்குப்பம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வரும் சீனிவாசன் என்பவர், "நான் தற்கொலை (Suicide) செய்துகொள்ள போகிறேன் என" பேசிய ஆடியோ தற்போது வேகமாக பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. 

அந்த ஆடியோவில் அவர், “வணக்கம் சார். நான் வேப்பங்குப்பம் SI சீனிவாசன். டிசி குப்பத்தை சேர்ந்த துளசி என்ற பெண் 10 லட்ச ரூபாய் சீட்டு நடத்தி வருகிறார். சீட்டு எடுத்தவர்கள் நிலுவை தொகை சீட்டு பணத்தை கேட்டடுள்ளனர். இதை ஆய்வாளர் உலக நாதன் விசாரித்துள்ளார். 

அவர் சரியாக விசாரணை செய்யாததால், கடந்த 26 ஆம் தேதி பணம் கேட்டு சென்றவர்களுக்கும், துளசிக்கும் அடிதடி நடந்துள்ளது. இதில் துளசி தாக்கப்பட்டதாக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். 

இவரிடம் நான் போய் வாக்குமூலம் வாங்கி வழக்கு பதிவு செய்ய இருந்த போது, டிசி குப்பத்தை சேர்ந்த திமுக பிரமுகர் மணிமாறன் வழக்கு பதிவு செய்யக்கூடாது என என்னை டார்ச்சர் செய்கிறார். ஏன் வழக்கு பதிவு செய்யக்கூடாது என நான் கேட்டால், நான் ஆளும் கட்சி பிரமுகர் என கூறுகிறார்.

 

ALSO READ | தீரன் பட பாணியில் கொள்ளை: 12-ஆம் வகுப்பு மாணவன் உட்பட இருவர் கைது

நான் என்ன செய்ய முடியும்? இந்த பக்கம் மு.பாபு, பிரகாஷ், கணபதி ஆகிய திமுக பிரமுகர்களின் தொல்லை தாங்க முடியவில்லை. அதனால நான் இன்று இரவு தற்கொலை செய்துகொள்ளப் போகிறேன். கண்காணிப்பு அய்யா அவர்களிடம் நான் ஏன் வழக்குப்பதிவு செய்யவில்லை என்பதை கூறி விட்டேன். என்னை மேலும் டார்ச்சர் பண்ணினால் நான் என்ன செய்ய முடியும்? 

மணல் திருடுகிறார்கள், கேட்டால் நான் பாபு பேசுறேன் விட்டிடு, கணபதி பேசுறேன் விட்டிடு என கூறுகிறார்கள். நான் என்ன செய்ய முடியும்? எனக்கு மன உழைச்சல் அதிகமாக உள்ளது. என்னால வாழ முடியவில்லை. நான் போய் விடுகிறேன். என்னை விட்டு விடுங்கள். என்னோட பணத்தை ஒழுங்கா அரசிடமிருந்து (TN Govenrment) வாங்கி குழந்தை, மனைவியிடம் கொடுத்து விடுங்கள்” என பேசியுள்ளார்.

உதவி ஆய்வாளர் பேசியுள்ள ஆடியோ தீயென பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ALSO READ | வீட்டில் பதுக்கியிருந்த ₹20 லட்சம் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்; 3 பேர் கைது 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News