தமிழத்துக்கு நல்லாட்சி விருது கொடுத்தவரை அடிக்க வேண்டும் - ஸ்டாலின்!

தமிழக அரசுக்கு நல்லாட்சி விருது கொடுத்தவரைத்தான் கொண்டுவந்து அடிக்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் கோபத்துடன் தெரிவித்துள்ளார்!!

Last Updated : Jan 27, 2020, 05:34 PM IST
தமிழத்துக்கு நல்லாட்சி விருது கொடுத்தவரை அடிக்க வேண்டும் -  ஸ்டாலின்! title=

தமிழக அரசுக்கு நல்லாட்சி விருது கொடுத்தவரைத்தான் கொண்டுவந்து அடிக்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் கோபத்துடன் தெரிவித்துள்ளார்!!

சென்னை: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா இல்லத் திருமண விழாவில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டார். அங்கு அவர் மணமக்களுக்கு தன்னுடைய வாழ்த்துகளை தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய ஸ்டாலின் கூறுகையில்; சுயமரியாதை இயக்கம் கண்டு பெண்களுக்கான சம உரிமையை பெற்றுத் தந்தவர் பெரியார் என்றும் இன்று அவரையே விமர்சிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது என்றும் கூறினார். தமிழகத்தில் நல்லாட்சி நடத்துவதற்காக விருதுகளை வென்றுள்ளதாக முதலமைச்சர் அடிக்கடி கூறி வருகிறார் என்றும் விருது கொடுத்தவர்களைத்தான் அடிக்க வேண்டும் என்றும் மு.க.ஸ்டாலின் கூறினார்.

பாஜகவுடன் கூட்டணியில் இருக்கக்கூடிய கட்சி பீகாரில் உள்ள நிதீஷ்குமாரின் கட்சி (ஐக்கிய ஜனதா தளம்). ஆனால் நிதீஷ் குமார் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவு அளித்து ஓட்டுப்போட்டவர். ஆனால், ஆதரித்து ஓட்டுப்போட்ட பீகார் முதல்வர் நிதீஷ்குமார் என்ன செய்துள்ளார்? தன்னுடைய பீகார் மாநிலத்தில் சிஏஏ (குடியுரிமை திருத்த சட்டத்தை) எதிர்ப்போம். ஆதரிக்கமாட்டோம் என்கிறார். மேற்கு வங்கத்திலே தொடர்ந்து குடியுரிமை திருத்த சட்டத்தை மம்தா பானர்ஜி எதிர்த்து கொண்டிருக்கிறார். ஆக இந்தியா முழுவதுமே குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் இந்த சட்டத்தை தமிழகத்தில் மட்டுமே எதிர்க்க முடியாத ஒரு ஆட்சி இருக்கிறது என திமுக தலைவர் முக ஸ்டாலின் திருமண விழாவில் கடுமையாக குற்றம்சாட்டினார். 

 

Trending News