கல்விக் கொள்கையை முழுமையாக அறிந்து கொள்ளாமலே ஸ்டாலின் கருத்து?: தமிழிசை

புதிய கல்வி கொள்கை பற்றி முழுமையாக அறிந்து கொள்ளாமல் தான் மு.க.ஸ்டாலின் கருத்து கூறினாரா என பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தராஜன் கேள்வி..

Last Updated : Jul 15, 2019, 10:07 AM IST
கல்விக் கொள்கையை முழுமையாக அறிந்து கொள்ளாமலே ஸ்டாலின் கருத்து?: தமிழிசை title=

புதிய கல்வி கொள்கை பற்றி முழுமையாக அறிந்து கொள்ளாமல் தான் மு.க.ஸ்டாலின் கருத்து கூறினாரா என பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தராஜன் கேள்வி..

புதிய வரைவு தேசிய கல்விக் கொள்கையை ஆராய்ந்திட திமுக சார்பில் ஆய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பி, முன்னாள் அமைச்சர் பொன்முடி, முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு, டாக்டர் ரவீந்திரநாத் உட்பட 8 பேர் ஆய்வுக்குழுவில் இடம் பெற்றுள்ளனர். இந்த குழு 10 நாட்களில் புதிய கல்வி கொள்கை குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய ஸ்டாலின் தெரிவித்திருந்தார். 

இந்நிலையில், கருத்து கூற காலஅவகாசம் தந்த பிறகு குழு அமைத்து இருக்கிறார்கள் என்றால் அதில் உள்நோக்கம் இல்லையா? என கல்விக்கொள்கை குறித்து ஆராய்ந்து கருத்துகூற 10 பேர் குழுவை ஸ்டாலின் அமைத்தது பற்றி தமிழிசை கேள்வி எழுப்பியுள்ளார். 

இது குறித்து, மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு தமிழிசை சௌந்திர ராஜன் பேட்டியளித்தார். அப்போது," புதிய கல்விக் கொள்ளை குறித்து ஆராய திமுக குழு அமைத்திருப்பது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், புதிய கல்விக் கொள்கை குறித்து முழுமையாக அறிந்து கொள்ளாமல் தான் கருத்து கூறினாரா என கேள்வி எழுப்பினார். மேலும், கருத்துக் கூற காலஅவகாசம் கொடுத்தப்பிறகு குழு அமைத்திருக்கிறார்கள் என்றால் அதில் உள்நோக்கம் இல்லையா? என தமிழிசை கேள்வி எழுப்பியுள்ளார்.  

 

Trending News